Pandian Stores2: மகனுக்காக ராஜியின் அம்மாவின் கோபம்… பாண்டியன் செய்த திடீர் சம்பவம்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
பாண்டியன் கதிரிடம் உனக்கு நான் சூரிட்டி கையெழுத்து போடுகிறேன் எனக் கூற அவர் மறுத்து விடுகிறார். இருந்தும் பாண்டியன் விடாப்பிடியாக சொல்ல செந்தில் இதுதான் நல்ல சான்ஸ். அப்பா இது செய்ய வாய்ப்பே இல்ல. ஒத்துக்கோ என அட்வைஸ் செய்கிறார்.
எல்லாரும் சொன்னதும் கதிரும் ஓகே சொல்ல பாண்டியனுடன் வங்கிக்கு செல்கிறார். செந்திலிடம் கோமதி நீ வச்சிருக்க செண்ட்டை எனக்கும் அடிடா எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்கள் காமெடியை பார்த்துக் கொண்டு இருக்கிறார் சரவணன்.
வெளியில் வரும் கதிர் காரை காட்ட பாண்டியன் இது எதுக்கு எனக் கேட்க டிரிப் போவதற்காக எடுத்து வைத்திருக்கேன் என்கிறார். உங்களால் என்னுடன் பைக்கில் வர முடியாது. பேங்கிற்கு நடந்தும் போக முடியாது என்கிறார். சரியென என இருவரும் காரில் கிளம்பி செல்கின்றனர்.

கோயில் போய்விட்டு ராஜி மற்றும் மீனா சிரித்து பேசிக்கொண்டு வர அதை பார்க்கும் குமார் அம்மா மற்றும் ராஜியின் அம்மா கடுப்பாகின்றனர். நீ செஞ்சதுக்கு தான் இவ்வளவு பிரச்னையும், அதுக்கு பழி வாங்க போய் தான் இப்போ குமார் ஜெயிலில் இருக்கான். அப்படியே இருந்துட மாட்டான்.
அவனை எப்படியும் வெளியில் அழைச்சிட்டு வருவோம் என்கிறார். மீனா இப்போ ராஜி என்ன செஞ்சி இருக்கணும் நினைக்கிறீங்க எனக் கேட்க வேண்டாம்னு அண்ணனுக்காக பேசி இருக்கணும் என்கிறார்கள். அது எப்படி குமார் செஞ்ச வேலைக்கு அமைதியா இருக்க முடியும் எனக் கேட்க அவன் செஞ்சது இவ செஞ்சதால தானே என்கிறார்கள்.
ஒருக்கட்டத்தில் அவர்கள் திட்டிவிட்டு செல்ல ராஜி, மீனாவிடம் கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்லி விடலாமா எனக் கேட்க மீனா அமைதியா இரு எனத் திட்டுகிறார். பாண்டியன் பேங்க் வாசலில் இறங்கி கொள்ள காரை நிறுத்த செல்கிறார் கதிர்.
கதிர் வருவதற்குள் அங்கு சக்திவேல் வர என்ன என் பையனை ஜெயிலில் வச்சிட்டனு சந்தோசமா இருக்கியா. அப்படியே இருந்துட மாட்டான். அவனை வெளியில் அழைச்சிட்டு வருவோம் என சக்திவேல் பேசிக்கொண்டு இருக்க பாண்டியன் பிள்ளை வளக்கிறதுக்கு என்னை பார்த்து கத்துக்கோ என்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டே இருக்கும் போது சக்திவேல் கோபமாக கத்த அங்கு வரும் கதிர் எங்க அப்பாக்கிட்டையே என்ன பேசுறீங்க எனத் திட்டுகிறார். அவரை சமாதானம் செய்து வங்கிக்கு அழைத்து சென்று விடுகிறார் பாண்டியன்.
உள்ளே சென்று அதிகாரியை பார்த்து தான் கடை வைத்திருக்கேன். என் மகனுக்காக எங்க கேட்டாலும் சூரிட்டி போடுவதாக சொல்கிறார். அதிகாரியும் பாண்டியனை பெருமையாக பேசிவிட்டு அதற்கான வழிகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.