Pandian Stores2: ராஜி எடுக்க போகும் திடீர் முடிவு… பொறாமையால் நடிக்கும் தங்கமயில்.. அடுத்த சங்கதியா?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கோமதி மற்றும் தங்கமயில் வீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கின்றனர். துணி எடுக்க வெளியில் போன மயில் சரவணன், அரசியுடன் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார். அதை பார்க்க அவருக்கு பொறாமையாக வருகிறது. சுற்றி சுற்றி சரவணனிடமே நிற்கிறார்.
பின்னர் கிச்சன் போக டைனிங் டேபிளில் மீனா வந்து அமர்ந்து சரவணன் மற்றும் அரசியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாண்டியன் ஸ்வீட், ஸ்நாக்ஸ் வாங்கி வந்து கொடுக்க எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மயில் அவர்களை பார்த்துக்கொண்டு நிற்கிறார்.
பின்னர் ரூமிற்குள் வந்து எல்லாரும் பேசிக்கிறாங்க. என்னிடம் யாருமே பேசவே இல்லை எனக் கடுப்பாக புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் வந்து மயிலிடம் பெரிதாக பேசிக்கொள்ளாமல் படுத்து விடுகிறார். மயில் கடுப்புடன் எழுந்து போக காலில் தட்டிக்கொண்டு அய்யோ வலிக்கிதே எனக் கத்த தொடங்குகிறார்.
சரவணன் என்ன ஆச்சு எனக் கேட்க என்னால் முடியலை என புலம்ப வீட்டில் இருப்பவர்களும் அங்கு வந்து விடுகின்றனர். கோமதி ஐஸ் பேக்கை எடுத்து வரச்சொல்லி மீனாவை அனுப்பிவிட்டு மயிலை பார்த்துக்கொள்கிறார். பின்னர் சரவணனிடம் கொடுத்து இதை மசாஜ் செய்துவிடு எனக் கொடுத்துவிட்டு அவரும் செல்கிறார்.
சரவணன் மயில் காலை அமுக்கி கொண்டு இருக்க அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறார். ராஜி மற்றும் மீனா இருவரும் பேசிக்கொண்டு இருக்க அப்போது நகை கிடைச்ச விஷயத்தை கூறுகிறார். ஆனால் கதிரின் பிசினஸ் பிரச்னையால் அதற்கு இதை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக சொல்கிறார்.

மீனா யோசனையாக பார்க்க மத்த நேரம் நான் கொடுத்து இருப்பேன். இப்போ கதிருக்கு வேண்டும் தானே என்பதால் இதை செய்ய போறேன். தொலைஞ்ச நகை தொலைஞ்ச மாதிரியே இருக்கட்டும் என்கிறார். கதிர் இதுக்கு என்ன சொல்வான் எனக் கேட்க அவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என்கிறார்.
அப்போ என்ன செய்றது? பார்த்துக்கொள்ளலாம். இப்போ அவன் பிசினஸுக்கு இது தேவை என ராஜி சொல்ல மீனாவும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.