Pandian Stores2: செந்தில் - கதிரை வச்சு செய்யும் பாண்டியன்… தங்கமயிலின் திடீர் சந்தேகம்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கதிர் அதான் 10 லட்சத்தினை வாங்கியாச்சே. வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தில் கேட்டேன். செந்தில் இது எப்போ நடந்துச்சு. அந்த காசை வாங்க முடியாதே. உனக்கு யாரு சொன்னா எனக் கேட்க அண்ணி தான் சொன்னாங்க என்கிறார்.
செந்தில், மீனா அவளோட ஆபிஸில் இருந்து கடன் வாங்கி இருக்கா. அந்த காசை எடுத்தப்பவே இது தப்புனு சொல்லிட்டு இருந்தா. அதான் பிரச்னை வந்த பிறகு உடனே காசோட வந்துட்டா. அவளை நான் நல்லப்படியா பாத்துக்கணும். அவ ரொம்ப நல்லா இருக்கணும் என்கிறார்.
மறுபக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். உன் புருஷனை கையில் வச்சிக்கோ. இனிமே அவருக்கு நீயும், உன் பிள்ளையும் தான் முக்கியமா இருக்கணும் என்கிறார். விடுமா இனிமே என் போக்குல விடு. நானே எல்லாத்தையும் பாத்துக்கிறேன் என்கிறார்.
எனக்கு வாந்தி, தலை சுத்தல் வரலைம்மா எனக் கேட்க அது எல்லாருக்கும் அப்படி இருக்கும். சிலருக்கு நல்லது என்கிறார். நீ நல்லா சாப்பிடு எனக் கூற சாப்பிடவே பயமா இருக்கும்மா எனக் கூற ஏன் டி எனக் கேட்க வயித்துல பாப்பா இருக்கு சாப்பாடு அது தலைல விழுந்துடும்ல என்கிறார்.
இதை அப்போது உள்ளே வரும் ராஜி மற்றும் மீனா கேட்டு சிரித்து விடுகின்றனர். மயில் அம்மா போனில் நீயெல்லாம் என்னடி படிச்ச. உனக்கு அறிவே இல்ல என கன்னாபின்னவென திட்டிக்கொண்டு இருக்கிறார். ராஜி மற்றும் மீனாவை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார்.
ராஜி மற்றும் மீனா என்ன சந்தேகம் கேட்டீங்க எனக் கேட்க தங்கமயில் அதான் அம்மா திட்டிட்டாங்க என்கிறார். அக்கா குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும். சாப்பாடு குடலில் இருக்கும் எனக் கூறுகிறார். இது ஸ்கூலையே சொல்லி இருப்பாங்களே எனக் கேட்க அந்த குரூப் இல்லை என சமாளிக்கிறார்.
வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார செந்தில் மற்றும் கதிர் இல்லாமல் எங்கே எனக் கேட்கிறார் கோமதி. மீனா மற்றும் ராஜி தங்களுக்கு தெரியாது எனக் கூற அந்த நேரத்தில் பாண்டியன் வந்துவிடுகிறார்.
கதிர் மற்றும் செந்திலை கேட்க அவர்கள் மாத்திரை வாங்க போய் இருப்பதாக சமாளிக்கிறார். எல்லாரும் சாப்பிட உட்கார பாதியில் கதிர் மற்றும் செந்தில் வர இவர்களை எங்க ஊர் சுத்த போனீங்க எனத் திட்டுகிறார். உங்களுக்கு சாப்பாடு கிடையாது எனக் கூற செந்தில் மற்றும் கதிர் சென்று விடுகின்றனர்.
பின்னர் பாண்டியன் சென்றதும் அவர்களை அழைத்து அழுது சீன் போட்டு கோமதி சாப்பிட வைக்க அந்த நேரத்தில் பாண்டியன் வந்துவிடுகிறார். அவரை தனியாக அழைத்து சாப்பாடு வேஸ்ட்டா போய்டும். அரிசி விலை என்ன தெரியுமா என அவரை சமாளித்து அனுப்புகிறார் கோமதி.