Pandian Stores2: குமாரால் கடுப்பாகும் அரசி குடும்பம்… அடுத்த சண்டைக்கு ரெடியா இருக்காங்களே!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி ரூமில் குமார் கடுப்பில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போ அவர் நண்பர் கால் செய்து தனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் பெண் பெரிய இடம் என்றும் கூறுகிறார். 80 லட்சத்தில் கார், வீடு வாங்கி தந்து இருப்பதாக சொல்ல குமார் வெறுப்பாகி விடுகிறார்.
இந்த கோபத்தில் அவரிடம் போனை வைத்து விட்டு அரசியிடம் சத்தம் போடுகிறார். அரசியை கல்யாணம் ஆகவில்லை எனக் கூறிவிட்டு வெளியில் போக சொல்ல நீ போய் சொல்லு என்கிறார். அப்போ நீ சொல்ல மாட்டா எனக் கேட்க முடியாது என்கிறார் அரசி.
ஒருகட்டத்தில் அரசியிடம் அப்போ நீ என் பொண்டாட்டி தானே. வா ஒன்னா கட்டிலில் படுக்கலாம் என அவரிடம் வம்புக்கு நிற்க குமாரை அடித்து கீழே தள்ளுகிறார் அரசி. குமார் தலையில் அடுத்துவிட்டு ரூமில் விட்டு பூட்டிவிட்டு செல்கிறார்.
செந்தில் ரூமில் கவலையாக உட்கார்ந்து இருக்க, அவர் நல்ல அப்பா இல்லனு சொன்னது தப்புதான். ஆனா எனக்கும் செலவுகள் இருக்கும். அதை புரிஞ்சிக்காம இருக்காரு. மத்தவங்களுக்கு முன்னாடி அசிங்கமா நடத்துறாரு. உன்னை நல்லா பாத்துக்கணும்னு எனக்கு ஆசை இருக்குமே என மீனாவிடம் வருத்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

காலையில் குமார் எழுந்து கதவை திறக்க பார்க்க பூட்டி இருக்கிறது. சக்திவேல் கதவு பூட்டி இருப்பதை பார்த்து திறக்க பார்க்கிறார். அரசி என நினைத்து குமார் அடிக்க போக அவர் ஏய் எனக் கத்துகிறார். பின்னர் அரசி வந்து நான் வாசல் தெளிக்க போன போது மறதியாக பூட்டிவிட்டு சென்றதாக சமாளித்துவிடுகிறார்.
ஹாலில் கோமதியுடன் சுகன்யா, மயில் பேசிக்கொண்டு இருக்க கிணறு வெட்ட பூதம் கிளம்புன கதையா இருக்கே? நாளைக்கு இவங்க வேறு கதை சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல என்கிறார். இதை கேட்கும் சுகன்யா இவளுக்கு மீனா போல என்ன கடுப்பு என யோசித்து கொண்டிருக்கிறார்.
பின்னர் மீனா வர அவரை பார்த்து கோமதி கடுப்பாகிறார். என்னிடம் பேச மாட்டீங்களா எனக் கேட்க கோமதி உன் புருஷன் பேசுனது சரியா என்கிறார். தப்பு செஞ்சா மட்டும் அவர் என் புருஷன். இல்லனா உங்க மகனா எனக் கேட்க கோமதி இனிமே உன் புருஷன் இப்படி பேசக்கூடாது என்கிறார்.
பின்னர் பாண்டியன் எழுந்து கோமதியை வெளியில் போக வேண்டும் என்கிறார். மனசு சரியில்லை கோயிலுக்கு போகலாம் என அழைத்தேன். வரீயா இல்லையா என்கிறார். கோமதி நான் வரேன் எனக் கூற சரி சீக்கிரம் கிளம்பு என்கிறார்.
பாண்டியன் வெளியில் வர காபியை மீனா கொடுக்க வேண்டாம் என்கிறார். பின்னர் கோபத்தால் வேண்டாம் எனச் சொல்லவில்லை. உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்ல என்கிறார். கோமதி மீனாவிடம் குழலி வீட்டில் ஒரு கல்யாணம் இருப்பதால் மீனாவை போக சொல்கிறார்.
பின்னர் கோமதி மற்றும் பாண்டியன் கிளம்பி கோயிலுக்கு சென்று விடுகின்றனர். பாண்டியன் இருக்கும் போது கோபமாக பேசும் கோமதி அவர் பின்னால் சென்று கோயிலுக்கு போவதாக சைகை செய்துவிட்டு செல்கிறார். இதை பார்க்கும் செந்தில் மற்றும் கதிர் சிரித்து கொள்கின்றனர்.
பாண்டியன் மற்றும் கோமதி கோயிலுக்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். பின்னர் பாண்டியன் தன் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். தான் செஞ்சதை சொல்லி செந்தில் என்னை இப்படி சொல்லிவிட்டதாக வருத்தப்படுகிறார். கோமதி அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

வீட்டில் அரசியை குமார் சத்தம் போட அங்கிருக்கும் கதிருக்கு கோபம் வருகிறது. அரசியிடம் மேலும் வீம்பு செய்ய குமாரை அடிக்க அங்கிருந்து வருகிறார் கதிர். அப்பத்தா வந்து தடுத்து கதிரை அனுப்பிவிட்டு குமாரை வீட்டுக்குள் அழைத்து வருகிறார்.
சக்திவேல் வந்து கேட்க அவரிடமும் குமார் அரசியை அலற வைப்பேன் என்கிறார். அப்பத்தா கோமதி வீட்டினர் குறித்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். சுகன்யா வந்து கோமதி வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்.
பின்னர் குமார் வர சேரில் ஊசியை இருந்து மீண்டும் அரசியிடம் வாங்கி கட்டிக்கொண்டு செல்கிறார். மீனா, குழலி இருவரும் சேர்ந்து கதிருடன் கல்யாணத்துக்கு போய் விட்டு வீடு திரும்பி கொண்டு இருக்கின்றனர். குழலி வீட்டில் இறக்க அங்கு குமார் இருக்கிறார்.
அவர் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருக்க யார் இது என தெரிந்து கொள்ள வேண்டும் என கதிரை அங்கையே நிறுத்தி வைக்கிறார் குழலி. கதிரை குமார் பார்த்து விட அவரை வெறுப்பேத்த அந்த பெண்ணை பைக்கில் அழைத்து செல்லுமாறு சீன் போடுகிறார்.
குமாரை ஃபாலோ செய்து போக சொல்ல குழலியும் அவருடன் வருகிறார். ஆனால் குமார் எஸ்கேப் ஆகிவிட வீட்டிற்கே போகலாம் என்கிறார் குழலி. இதனால் வீட்டில் அவனிடம் நியாயம் கேட்க வந்து நிற்கிறார். கோமதி, ராஜி வர அவர்களிடமும் இதை சொல்கிறார்.