என்னை வச்சு புகழ் தேடுறாங்க… பிரஜன் டயலாக்கால் கடுப்பான ரசிகர்கள்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பிரஜின் தற்போது மீண்டும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதற்கான காரணம் தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழ் சின்னத்திரையில் ஹிட் பாடல்கள் என ஒரு வரிசையை எடுத்துக்கொண்டால் அதில் முக்கிய இடம் கண்டிப்பாக காதலிக்க நேரமில்லை வார்த்தை அனுப்புவுக்கு சேரும். இதில் நடித்தவர் அப்போது தொகுப்பாளராக இருந்த பிரஜின்.
சன் டிவியில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருந்தவர் பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சின்னத்திரையில் இருந்து விலகி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை.
பல ஆண்டுகள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்தார். அதுவும் முதல் முறை கணவன் மனைவியாக வந்தது பலரிடமும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதுவே இவருக்கு மைனஸாக அமைந்து பாதியிலேயே வெளியேறினார்.
தற்போது படத்தில் நடித்து வரும் பிரஜின் தன்னுடைய படங்களின் புரோமோஷனுக்கே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நேற்று எழுந்தது. இதற்கு பதிலளித்த அவர், அவர் யார் என்றே எனக்கு தெரியாது. என்னை வைத்து அவர் புரோமோஷன் தேடிக்கொள்கிறார் என பதில் சொல்லி இருப்பது திமிராக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
