உங்க வாய் உங்க உருட்டு… எதற்காக இந்த திடீர் கல்யாணம்… பிரியங்கா தேஷ்பாண்டேவின் பதிவு வைரல்!

Priyanka Deshpande: பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு திடீரென வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் விஜய் டிவியின் பிரியங்கா தேஷ்பாண்டே ரொம்பவே பிரபலம் தான். ஆரம்பத்தில் அவர் விஜயில் எண்ட்ரி கொடுத்த போது பலரும் பெரிய அளவில் அவரை அங்கீகரிக்கவே இல்லை. அவர் வந்த சமயம் விஜயில் ஏகப்பட்ட பெண் தொகுப்பாளர்கள் இருந்தனர்.
திவ்யதர்ஷினி, பாவனா என ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட பெண் தொகுப்பாளினிகளுடன் போட்டி போட்டு தற்போது விஜய் டிவியின் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்து இருக்கிறார். கிட்டத்தட்ட விஜயின் பிரபல நிகழ்ச்சிக்கு பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் முதலில் விஜய் டிவியின் இயக்குனர் பிரவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெரிய அளவில் வெளியில் வராமல் இருந்தனர். ஒரு விருது மேடையில் கூட பிரியங்கா தனக்கு மாமனார் கூட கால் அமுக்கி விட்டதாக பெருமிதமாக பேசினார்.
ஆனால் அவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது தன்னுடைய கணவர் குறித்து பேசவே இல்லை. அவர் கணவரும் குடும்ப சுற்றில் வீட்டுக்குள் வரவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுப்புகள் கிளம்பியது.
ஆனால் பிரியங்கா தரப்பு வாய் திறக்காமலே இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென வசி என்பவரை கரம் பிடித்தார். அவர் ஒரு டிஜே என்பதும் பல மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டம் போய் பிரியங்கா கர்ப்பம் என்றும் கூறப்பட்டது.
இருந்தும் தன்னுடைய கல்யாண அறிவிப்பை தவிர அவர் மற்ற எதுவுமே பேசாமல் இருந்தார். இந்நிலையில் தன்னுடைய கல்யாணம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் உன் வாய் உங்க உருட்டு என்ற டிசர்ட்டை போட்டு சிரித்தப்படி இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அது வைரலாகி வருகிறது.