பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வெப்சீரிஸில் ஒரு குடும்பமே நடிக்கிதே நோட் பண்ணீங்களா?
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது புது வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பலரும் நோட் செய்யாத ஒரு செம சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹாட்ஸ்டார் ஓடிடியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் வெப்சீரிஸ் எபிசோட்கள் ஒளிபரப்பாகி வந்தது. அந்த ரூட்டில் இந்த முறை புதிய மாற்றமாக புதன் கிழமையும் வெப்சீரிஸ் அறிமுகமாகி இருக்கிறது.
காயத்ரி, போஸ் வெங்கட், ராஜ் அய்யப்பா நடிப்பில் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வெப்சீரிஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கடந்தாண்டு ஒளிபரப்பான உப்பு புளி காரம் வெப்சீரிஸுன் இரண்டாவது சீசன் இதுதான் எனக் கூறப்படுகிறது.
அந்த பெயர் மற்ற மாநிலங்களில் ரீச் கொடுக்காது என்ற காரணத்தினால் ஃப்ரஷாக பெயரை மாற்றி இருக்கின்றனர். இதில் மூன்று மகள் மற்றும் தம்பியை சுற்றி உருவாகும் கதையை மையமாக வைத்து இந்த சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முக்கிய கேரக்டராக ராஜ் அய்யப்பா நடிக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவரின் அப்பாவாக நடிக்கும் பானு பிரகாஷ் தான் இவரின் ரியல் அப்பா எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் நம்ரிதா.
இவர் ராஜ் அய்யப்பாவின் தங்கை எனக் கூறப்படுகிறது. முதல்முறையாக ஒரு சீரிஸில் முக்கிய கேரக்டரில் ஒரு குடும்பமே நடிக்கும் சம்பவம் தற்போது தான் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
