வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். நடிகைகளே இப்படித்தான் என்ற எண்ணம் உள்ள சில மூடர்கள் நடிகைகளின் போட்டோக்களை வைத்துக் கொண்டு கன்னாபின்னானு இணையத்தில் அந்த போட்டோக்களில் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இல்லாததை இருக்கிறமாதிரி செய்து பல பேரின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்படி பிரச்சினையில் மாட்டிக் கொண்டவர் ராஜாராணி சீரியலில் மாமியாராக இருக்கும் நடிகை பிரவீனா. இள வயதே ஆன பிரவீனா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார். ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இவரின் கணக்கிலயே போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். மேலும் இவரின் கணக்கை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை பிரவீனா சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளாராம். மேலும் அதிலிருக்கும் புகைப்படங்களை நீக்கவும் வலியுறுத்தியுள்ளார். கூடிய சீக்கிரம் வக்கிரமம் பிடித்த அந்த நபர்களை பிடித்து விடுவோம் என கூறியிருக்கின்றனராம் போலீஸ் தரப்பு.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…