மா.கா.பா ஆனந்த் பெயருக்கு முன்னால் இருக்கும் ரகசியம்… அப்போ அது இனிஷியல் இல்லையா?

MaKaPa Anand: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளரில் முக்கியமானவர் மாகாபா ஆனந்த். ஆனால் அவர் பெயர் முன்னால் இருக்கும் அந்த மாகாபாவிற்கு அர்த்தம் இனிஷியல் இல்லை என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ரேடியோ நிறுவனங்களில் பிரபல ஆர்ஜேவாக இருந்தவர் மாகாபா. இவர் தொடர்ந்து சினிமா காரம் காபி ஷோவை தொகுத்து வழங்குவதன் மூலம் சின்னத்திரைக்குள் வந்தார். நல்ல வரவேற்பு கிடைக்க சிவகார்த்திகேயனின் ஹிட் ஷோ அது இது எது அவர் போனபின் இவர் கைக்கு மாறியது.
அந்த ஷோவில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது. தொடர்ந்து விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை, மிஸர்ஸ் சின்னத்திரை, கலக்க போவது யாரு, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரும் இவருடன் இணைந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் தொகுத்து வழங்குவதே ரசிகர்களுக்கு பெரிய அளவில் சுவாரஸ்யமாக இருக்கும். இப்படி புகழ்பெற்று தற்போது விஜய் டிவியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவராக மா.கா.பா ஆனந்த் இருக்கிறார்.

இப்படிப்பட்ட தொகுப்பாளரான இவரின் பெயர் முன்னால் இருக்கும் மா.கா.பா குறித்து ஆச்சரியமான விஷயத்தை சொல்லி இருக்கிறார். பொதுவாக மா.கா.பா அவரின் இனிஷியல் என்று தான் நினைத்து கொண்டு இருப்போம். அதான் இல்லை.
முதலில் நான் சூரியன் எஃப் எம்மில் வேலை செய்தேன். பின்னர் இரண்டு வருடம் கேப்பிற்கு பின்னர் ரேடியோ மிர்ச்சியில் வேலை கிடைத்தது. ஆனால் சென்னை போக சொன்னார்கள். என் மனைவி கர்ப்பமாக இருந்ததால் அவளை விட்டு செல்ல எனக்கு மனதில்லை.
அதனால் கோயமுத்துரே வேண்டும் என அடம்பிடித்தேன். எஃப்.எம்மில் மார்க்கெட்டிங் விவரங்களில் ஐ.எம்.ஆர்.பி கணக்கெடுப்பில் என் பெயர் வந்துவிட்டது. அவர்கள் என்னை தேர்வு செய்தாலும் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டனர்.
அப்போது என்னுடைய பாஸ் மிர்ச்சி செந்தில் தான் மா.கா.பா என்று எனக்கு ஒரு அடைமொழியை கொடுத்தார். மாகாபா என்றால் வடமொழியில் அம்மாவுடைய அப்பா என்று பெயராம். பின்னர் அதுவே என்னுடைய பெயராகிவிட்டது. கெசட்டில் மட்டும் தான் மாறவில்லை. ஆனால் இப்போ இது பிராண்ட் ஆகிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.