ரிசார்ட் வெப்சீரிஸின் இந்த பிரபலம்… கே.பாலசந்தரின் பேரனா? அம்மாடி!

வெள்ளி ரிலீஸாகும் ரிசார்ட் இந்த வாரம் சிக்காவின் உண்மை உடைப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
resort

தற்போது ஜியோ ஹாட் ஸ்டாரின் சூப்பர் ஹிட் வெப் சீரிஸ் ஆக இருக்கும் ரிசார்ட்டில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான கே பாலச்சந்தரின் பேரன் நடிப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்திற்குப் பிறகு வெப் சீரிஸ் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல பிரபலங்களும் வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு முக்கிய விஷயத்தை செய்து வருகிறது.

புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒரு வெப்சிரிஸை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ், வியாழக்கிழமை எல் பி டபிள்யூ, வெள்ளிக்கிழமை ரிசார்ட் என ரசிகர்களின் நேரத்தை பிடித்துக் கொண்டது.

resort

 அந்த வகையில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ரிசார்ட் தொடர் கடற்கரை ஒட்டிய ஒரு ஆடம்பர ரிசார்ட்டில் வேலை செய்யும் நபர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக வெற்றி கேரக்டரில் எருமைசாணி புகழ் விஜய் நடிக்கிறார்.

மேலும், முக்கிய கேரக்டரில் அபிநயா நேத்ரன், தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதில் விக்கி கேரக்டரில் நடிக்கிறார் விஷ்ணு பாலா. இவர் பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் பேரன் எனக் கூறப்படுகிறது. 

From Around the web