CWCல் ரோஜாக்கு என்ன தகுதி இருக்கு? அது என்னுடைய இடம்… சொன்னது யாரு பாருங்க?

குக் வித் கோமாளியின் ஏழாவது சீசன் தற்போது ரசிகர்களிடம் செம ஹிட்டடித்து வரும் நிலையில் தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. 
 
CWC

CWC: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்க ரோஜாவுக்கு தகுதி இல்ல. அது என்னுடைய இடம் என பிரபலம் ஒருவர் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

சமையல் நிகழ்ச்சியில் கோமாளியை வைத்து செய்த நடக்கும் குக் வித் கோமாளி மிகப் பிரபலம். அந்த வகையில் இந்த முறை கணவன் மனைவியாக பிரபலங்கள் களமிறங்கி இருக்கின்றனர். இதற்கு குக் வித் கோமாளி டபுள் தி ட்ரபுள்ஸ் என பெயர் வைத்துள்ளனர். 

பொதுவாக இரண்டு பிரபல நடுவர்கள் மட்டுமே இதுவரை குக் வித் கோமாளியில் இருந்தனர். ஆனால் இந்த முறை நான்கு பிரபலங்கள் நடுவர்களாக உள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, கௌஷிக் மட்டுமல்லாமல் நடிகை ரோஜாவும் வந்து இருக்கின்றார். 

இதுவரை 6 வாரங்களை கடந்து இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை நிஷா ரியாஸ் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். மற்ற நடுவர்களை போல இல்லாமல் சொல்லும் பாயிண்ட்களை கணக்கச்சிதமாக சொல்வதில் ரோஜா செமையாக செய்து வருகின்றார்.

மொக்கை காமெடி போடாமல் ரசிக்கும்படியாக அவர் நடந்து கொள்வதால் குக் வித் கோமாளி ரசிகர்களிடம் ரோஜாவுக்கு தற்போது வைரல் புகழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவரெல்லாம் ஒரு ஜட்ஜா? அந்த இடத்தில் உட்கார அவருக்கு தகுதி இல்ல.

அந்த நிகழ்ச்சியில் செஃப் தாமுவுக்கு பின்னர் அந்த நடுவர் இருக்கையில் உட்கார எனக்கு தான் தகுதி இருக்கு என பேசி இருக்கிறார் வனிதா விஜயக்குமார். இப்படி சூடான டயலாக்கை அடிக்கடி வெளியிடுவதில் அக்கா எப்பையுமே ட்ரெண்டிங் தான். இந்த முறை ரோஜாவை தாக்கி இருக்கிறார் என்பதே வித்தியாசம்.


 

From Around the web