கடைய சாத்தியாச்சு... பாக்கியலட்சுமி குறித்து வந்த பக்கா அப்டேட்.. கோபிக்கு இந்த கவலையா?

by Akhilan |
bakkiyalakshmi
X

Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் குறித்து அந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.

குடும்ப பெண்ணாக இருக்கும் பெண் எப்படி தொழில் செய்து உழைத்து முன்னேறினார் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை. இதில் ஹீரோயினாக முதலில் கஸ்தூரி மற்றும் பிரியா ராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர் தெலுங்கில் இருந்து சுசித்ரா ஷெட்டி என்பவரை பாக்கியாவாக களமிறக்கினர். அவர் சீரியலின் முக்கிய அங்கம் என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் பெரிய வில்லத்தனம் இல்லாமல் எதார்த்தமான கதையாக அமைந்ததும் இதன் வெற்றியாக பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஐந்து வருடங்களை கடந்து இருக்கும் நிலையில் தற்போது சீரியல் கிளைமேக்ஸை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாக்கியா ஜெயித்து விட்டார். அவரின் கணவர் கோபி திருந்தி இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதால் அவர் அம்மாவுடன் இருக்கிறார்.

விரைவில் இதன் இறுதி அத்தியாயம் நெருங்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். அந்த நேரத்தில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் இன்ஸ்டா போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி என்ற பொது தேர்வு முடியும் நேரம் வந்துவிட்டது.

நான் பாஸா இல்ல ஃபெயிலா என்பதை ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்குது. மனதிலும் உடலிலும் சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் முயற்சிகள் தொடரும். ஒரு நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும் நன்றி வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story