பிக்பாஸ் ஃபேன்ஸுக்கு செம ட்ரீட்… தொடங்க போகும் செம்ம சம்பவம்!

இழந்த காதல், முடிந்த கல்யாணம் என தவிக்கும் 12 போட்டியாளர்களின் வாழ்க்கையில் மற்றொரு வாழ்க்கையை துளிர்க்க செய்யும் சம்பவம்
 
azhage azhagu

ஹாட் ஸ்டார் ஓடிடியில் சமீப காலங்களாகவே சில தரமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் நிலையில் அடுத்த ஒரு அதிரடியை வெளியிட இருக்கின்றனர்.

ஒரே வீட்டில் 100 நாட்களுக்கு அதிகமாக பதினாறு செலிப்ரிட்டிகள் தங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். வெளியுலக தொடர்பு இல்லாத காரணத்தால் இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள் சண்டைகள் காதல்கள் என பலவற்றை இந்த நிகழ்ச்சியில் ஒளியும் மறைவு இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்படி ஒரு காரணத்தால் இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் வெளியாகி பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழிலும் இதுவரை ஒன்பதாவது சீசன் வரை முடிந்திருக்கிறது. இந்நிலையில் இன்னொரு குட்டி மினி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர்.

காதல் வாழ்க்கையில் பிரச்சனையை சந்தித்தவர்கள், திருமண உறவை முடித்துக் கொண்டவர்கள் என துணை இல்லாமல் இருக்கும் ஆறு ஆண்களும் ஆறு பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

second love

இவர்கள் ஒரு சொகுசு பங்களாவில் 35 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் தொடங்கி டாஸ்குகள் வரை ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் வார இறுதியில் வருவார்.

போட்டியாளர்களுடன் க்யூப்பிடாக  அவர்களை தொகுத்து வழங்க இருக்கிறார் நடிகை ஸ்ருதிகா அர்ஜூன். இவர் ஹிந்தி பிக் பாஸில் இறுதிவரை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் வின்னரான அசீமும் கலந்து கொள்ள இருக்கிறார்.

மும்பையில் ஒரு ஆடம்பர பங்களாவில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. பகலில் ஹாட்ஸ்டாரிலும் இரவில் விஜய் டிவியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது. வரும் ஜூலை 13ஆம் தேதியிலிருந்து இந்த நிகழ்ச்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

From Around the web