ஹீரோயினுக்கு ஒரு லட்சம்.. எனக்கு வெறும் மூவாயிரம்தான்! புலம்பும் சீரியல் நடிகர்....
சன் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் லீடு ரோலில் நடிப்பவர் சீரியல் நடிகரான நியாஸ். இதற்கு முன் புது புது ராகங்கள் போன்ற பல நாடகங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். முதன்முதலில் விஜய் டிவியில் ஒரு செகண்ட் ஹீரோவாகத்தான் இவர் அறிமுகமானாராம் .
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது .எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நியாஸ் இருக்க சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது .இதற்கு முன் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தவர்.
அதை உதறி தள்ளிவிட்டு விஜய் டிவிக்கு நடிக்க வந்திருக்கிறார். அப்போது அவருடைய சம்பளம் நாள்தோறும் 3000 ரூபாயாம். அவ்வளவு பெரிய சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு ஏன் வந்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு எப்படியாவது நடிக்க வேண்டும் என்று தான் என்னுடைய நோக்கமாக இருந்தது.
அது பெரிய திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி என்னுடைய நோக்கம் நிறைவேறியது. அதனால் சம்பளத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை. ஒரு நாளைக்கு 3000 ரூபாய் தான் கொடுத்தார்கள் என நியாஸ் ஒரு பேட்டியில் கூறினார் .
பெரும்பாலும் நடிகைகளுக்கு லட்சங்களில் சம்பளம் தருவதாகவும் நியாஸ் கூறினார். அதற்கு காரணம் சீரியலைப் பொறுத்த வரைக்கும் அங்கு பெண்கள் தான் பில்லர் ஆக இருப்பார்கள். அவர்களை சுற்றி தான் கதை நகரும். அதன் காரணத்தாலேயே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.
நான் சொல்லும் நடிகைகள் ஒருவேளை வெள்ளித்திரையில் இருந்து கூட வந்திருக்கலாம். மூத்த நடிகைகளாக கூட இருக்கலாம். அனுபவிக்க நடிகைகளாக கூட இருக்கலாம் என நியாஸ் கூறினார். இன்ஸ்டா மூலம் தன்னை பிரபலமாகி கொண்டு அதிலிருந்து நேரடியாக சீரியலுக்கு வந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள அவர்கள் சீரியலில் வரும் பொழுது இன்னும் அவர்கள் மீது பெரிய ஹைப் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணத்தாலேயே அவர்களுக்கு உண்டான சம்பளமும் அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் நியாஸ் இப்போது மூன்று முடிச்சு சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மூவாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நியாஸ் இப்போது ஒரு டீசன்டான சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.