பெட் ரூம் சீன்ல புகுந்து விளையாடுவாங்க.. ஆல்யா சஞ்சீவ் இடையே பத்திக்கிச்சு நெருப்பு
பிரபலமான ஜோடி: சினிமாவில் சூர்யா ஜோதிகா ,அஜித் ஷாலினி என ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக எப்படி வலம் வருகிறார்களோ அதைப்போல சின்னத்திரையிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான ரியல் ஜோடிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மிகவும் புகழ்பெற்ற ஜோடிகளாக இருப்பவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி தொடரில் இருவரும் சேர்ந்து நடித்த மூலம் இருவருக்குமே காதல் ஏற்பட்டது .
இருவருமே பிஸி: ஒருவரை ஒருவர் காதலித்து அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவருமே சீரியலில் நடித்து வருகின்றனர். சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலான கயல் தொடரில் சஞ்சீவ் லீடூ ரோலில் நடித்து வருகிறார். அதைப்போல ஆல்யாவும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார் .
ரொமாண்டிக்கில் புகுந்து விளையாடும் சஞ்சீவ்: இரண்டு தொடருமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடராகும். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது பல விஷயங்களை பகிர்ந்தனர் .அதிலும் கயல் சீரியலில் சமீப காலமாக கயலுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே ரொமான்டிக் காட்சி மிகவும் தூக்கலாக இருக்கிறது. அதுவும் தொடரில் இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது.
கிஸ் பண்ணேன்: திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் மற்றும் கயல் ஆகிய இருவருக்கும் இடையேயான அந்த நெருக்கமான காட்சிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படி சீரியல்களில் சஞ்சீவும் ஆல்யாவும் தனித்தனியே அவர்கள் கதாபாத்திரத்தில் ஒன்றி நடிக்கும் பொழுது எந்த மாதிரியான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என அந்த பேட்டியில் கூறியிருந்தனர். இதைப் பற்றி சஞ்சீவ் கூறும்போது கயல் தொடரில் ஒரு காட்சி நான் நடித்து முடித்துவிட்டு ஆல்யாவிடம் வந்து ‘பப்பு இந்த மாதிரி நான் ஒரு காட்சியில் கயலை கிஸ் பண்ண வேண்டும். அந்த மாதிரி நடித்திருக்கிறேன்’ எனக் கூறினாராம்.
அதை டிவியில் பார்க்கும் பொழுது ஆல்யா வருத்தப்பட்டாராம். என்னாச்சு பப்பு என கேட்டதற்கு அதற்கு ஆல்யா ஏன் இப்படி எல்லாம் நடிச்சீங்க என கேட்டாராம். உடனே சஞ்சீவ் ‘ நீ மட்டும் இனியா தொடரில் ரொமான்டிக்கில் புகுந்து விளையாடுறீங்க. பெட் ரூம் சீனில் அதுவும் சினிமா பாடலை போட்டு ரொமான்டிக்கை அள்ளி வீசுறீங்க. உங்களுக்கு வந்தா அது ரத்தம். எனக்கு மட்டும் தக்காளி சட்னியா’ என்று சஞ்சீவ் கூறினார்.
இதற்கு ஆல்யா பதில் அளிக்கும் பொழுது ‘நான் நடிக்கும் போது எனக்கு எதிரே உள்ளவரை அண்ணனா நினைத்து நடிப்பேன்’ என கூறினார் .அதற்கு சஞ்சீவ் நானும் தான். நான் நடிக்கும் போது எனக்கு எதிரே உள்ளவரை தங்கை போல நினைத்து நடிப்பேன் என இருவரும் மாறி மாறி அவரவர் நியாயத்தை அந்த பேட்டியில் கூறியிருந்தனர்.