Categories: television

அர்னாவ் மட்டும் வெளியே வரட்டும்!..உனக்கு இருக்கு!.. கொலை மிரட்டலால் வாழ்க்கையை தொலைத்த சீரியல் நடிகை!..

கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். கர்நாடகாவை சேர்ந்த திவ்யா தமிழில் ஏகப்பட்ட சீரியல்களில் லீடு ரோலில் நடித்து மிகவும் புகழ் பெற்றார். விஜய் டிவியில் செல்லம்மா சீரியல் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் அர்ணவ்.

arnav

அர்னவ்வும் திவ்யாவும் கிட்டத்தட்ட 5 வருடங்கள் காதலித்து இருவரும் லிவ்விங் முறையில் வாழ்ந்தனர். இந்த நிலையில் திவ்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கெனவே விவாகரத்து பெற்றவரான திவ்யாவிற்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இது தெரிந்தே தான் திவ்யாவை அர்னவ் திருமணம் செய்தார்.

திருமணமான கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து பெரிய பிரச்சினையாகி போலீஸ் வரைக்கும் சென்றது. இருவரும் மாறி மாறி புகார் அளித்து அர்னவை விசாரிக்க பலமுறை அழைத்தும் அவர் வராததால் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

arnav

இதையும் படிங்க : இவங்களுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?.. பிரபல சீரியல் வில்லி நடிகையின் மோசமான மறுபக்கம்!..

இதற்கு பின்னாடி அர்னவின் சக நடிகை ஒருவர் அர்னவ் மீதே புகார் அளித்திருந்தார். இதுவும் ஒரு விதத்தில் அர்னவிற்கு பின் விளைவை ஏற்படுத்தியது. அதாவது திவ்யா வீட்டில் இல்லாத நேரத்தில் தன் சக நடிகையான ரெகானாவை அழைப்பாராம். திவ்யா வீட்டில் இல்லை . நீ கொஞ்சம் வா என்று அதற்கு அழைப்பாராம்.

இதை அந்த நடிகையே தெரிவித்தார். இப்போது அந்த ஒரு காரணமும் அர்னவ் சிறைக்கு போனதுக்கு காரணமாக இருப்பதால் அர்னவ் நெருங்கிய நண்பர்கள் சிலர் ரெகானாவை மிரட்டுகின்றனர். அர்னவ் மட்டும் வெளியில வரட்டும்டி , உனக்கு இருக்கு என்று மிரட்டினார்களாம். மேலும் இதனால் உன் வேலைவாய்ப்பும் பறிபோகும் என்று தொடர்ந்து பயமுறுத்தியும் வந்தனராம்.

இதையும் படிங்க : ப்ரோமோஷனுக்கே வர மாட்டாரு… துணிவுக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்கள்… கடுப்பில் அஜித் எடுத்த புது முடிவு…

arnav

ஆனால் இதை எதையும் சகட்டு பண்ணாத ரெகானா அவன் வெளியில வந்தா என்ன பெரிய கிழிச்சிருவானா? இப்படியே பயந்து கொண்டு இருந்தால் தவறுகளை யார் தான் தட்டிக் கேட்பது என்று மிகவும் துணிச்சலாக பேசினார் ரெகானா. தற்போது அர்னவ் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini