Connect with us
manisha_main_cine

television

பாதுகாப்பு இல்லை..! அப்படியெல்லாம் நடிக்க சொல்றாங்க..! கதறும் பிரபல சீரியல் நடிகை…

திரைப்படங்கள் மூலம் எப்படி நடிகர் நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து முன்னனியில் இருக்கிறார்களோ அதே போல் சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் வெள்ளித்திரை அளவுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

manish1_cine

மேலும் சேனல்களுக்குள்ளாகவே போட்டிகள் நடந்து வருகின்றனர். முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் மௌசு அதிகமாக இருந்துச்சு. விஜய் டிவியின் ஆதிக்கத்தால் சன் டிவியின் டிஆர்பி குறைய தொடங்கியது.அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சி வளரத்தொடங்கி சன், விஜய் போன்ற தொலைக்காட்சி தொடர்களை பின்னுக்கு தள்ளி முன்னனியில் நிற்கிறது.

manish2_cine

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்று ’கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்த சீரியலில் ஆதிரா கதாபாத்திம் முக்கியமான கதாபாத்திரமாகும். இதில் நடித்தவர் தான் நடிகை மனிஷா. இவர் இப்போது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

manish3_cie

விலகியதற்கான காரணத்தையும் கூறி சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது சின்னத்திரையில் பாதுகாப்பு இல்லை எனவும் 9 லிருந்து 10 வரை சூட்டிங் என்றால் 11 மணி ஆனாலும் விட மாட்டாங்க எனவும் கரண்ட் ஷாக் அடிக்கிற சீன் இருந்து உண்மையிலயே ஷாக் அடிச்சதுனா அப்படியே நடி என்றும் சொல்கிறார்கள். மேலும் சம்பளபாக்கி 6 லட்சம் தரவில்லை எனவும் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in television

To Top