ஆனந்தி மேல மித்ரா கடும் கோபம்... வீட்டை விட்டு வெளியேறிய மகேஷ்... அன்பின் தேடலில் சிக்குவாரா?

சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் தற்போது கதையில் வேகம் எடுத்து வருகிறது. நேற்று நடந்த எபிசோடில் நடந்தவை இதுதான். ஆனந்தி மனசில் தான் இன்னும் இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் மகேஷ் தாய் போல கவனிக்கும் வார்டனைப் பார்க்கப் போகிறான். சேலையும் பரிசாகக் கொடுக்கிறான். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். இனி...
வீட்டை விட்டு வெளியேறிய மகேஷ்: இதைப் பார்க்கும் அவனது அம்மா பார்வதி மகேஷைக் கண்டிக்கிறாள். அவரோ வார்டனையே உயர்த்திப் பேசுகிறான்;. அதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறாள்;. யாரை உனக்குப் பிடிக்குமோ அவள் கிட்டேயே போன்னு சொல்லி விடுகிறாள்;. இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான் மகேஷ். அவரது அப்பாவும் எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். எந்தப் பலனும் இல்லை.
வசைபாடிய மித்ரா: இதற்கிடையில் மகேஷின் அப்பா அவரைத்தேடி நேராக வார்டனிடம் வருகிறார். வார்டன் அவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறாள்;. மகேஷைக் காணோமான்னு பதறுகிறாள்;. போன் போட்டுப் பார்க்கிறாள். அதே சமயம் மித்ரா எல்லாத்துக்கும் காரணம் ஆனந்திதான்னு அவளை வசைபாடுகிறாள். இதை ஆனந்தியின் தோழிகள் கண்டிக்கின்றனர்.
தேடி அலையும் அன்பு - ஆனந்தி : வார்டனும் ஆனந்தியை மகேஷூக்குப் போன் போடச் சொல்கிறாள். நடந்ததை அறிந்த ஆனந்தியும் பதற்றப்பட்டு அன்புக்குப் போன் போட்டு விவரத்தைச் சொல்கிறாள். அன்பு மகேஷூக்குப் போன் போடுகிறார். எடுக்கவில்லை. உடனே இருவரும் சேர்ந்து பைக்கில் சென்று இரவோடு இரவாக மகேஷைத் தேடி அலைகின்றனர்.
சுண்டல் விற்கும் சிறுவன்: மகேஷோ ஒரு கடற்கரையில் இரவு நேரத்தில் மணலில் படுத்துக் கிடக்கிறார். சுண்டல் விற்கும் சிறுவன் அவரிடம் வந்து சுண்டல் விற்கிறான். அதை வாங்குவதற்காக பையில் பணத்தை எடுக்க தேடுகிறார். பர்ஸ் இல்லை. மறந்து காரில் வைத்து விட்டதாக அந்தப் பையனிடம் சொல்கிறார்.
மகேஷின் முகத்தைப் பார்த்த அந்த சிறுவன் நீங்க பசியோடு இருக்கீங்க. பார்த்தாலே தெரியுது. பணம் எல்லாம் வேண்டாம். சாப்பிடுங்கன்னு கொடுத்தும் மறுத்து விடுகிறார் மகேஷ். பின்னர் அங்கிருந்து சிறுவன் சென்று விடுகிறான். அப்போது மகேஷூக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது.