சிங்கப்பெண்ணே: கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கேட்ட பஞ்சாயத்து... ஆனந்தி சொன்ன பதில் என்ன?

by Sankaran |   ( Updated:2025-08-01 17:54:22  )
Anandhi, suyambu
X

சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தியை வைத்துப் பஞ்சாயத்து சீன் பரபரப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது.

பஞ்சாயத்துல ஆனந்தியையும் அவளது குடும்பத்தாரையும் நிக்க வைத்து மானங்கெட்ட கேள்வி கேட்கின்றனர். ஆனந்தி தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் யாருன்னு சொல்லணும். இல்லன்னா பஞ்சாயத்தோட கோபத்துக்கு அழகப்பன் குடும்பம் ஆளாக நேரும் என்று பஞ்சாயத்தார் எச்சரிக்கிறார்கள். இது இந்த ஊருல இருக்குற மற்ற பொண்ணுகளுக்கும் தவறான முன்னுதாரணமாக ஆகிடும் என்கிறார்கள்.

குடும்பத்துல கஷ்டம்னு பொம்பளைப் பிள்ளையை டவுனுக்கு அனுப்பி வச்சா அங்க எல்லாரும் கட்டுக்கோப்பு இல்லாம இருக்குற இடத்துல இருந்து பல ஆம்பளைகள் இருக்குற இடத்துல வேலை செஞ்சா இப்படித்தான் இருக்கும். கண்டதை எல்லாம் சுமந்துட்டுத்தான் வரணும் என்கிறான் சேகர். ஐயா பார்த்துப் பேசுங்கன்னு அழகப்பன் சொல்கிறார்.

உங்க பொண்ணு பார்த்துப் பழகி இருந்தா நாங்க ஏன் இப்படி பேசுறோம்னு சேகர் நக்கலாக சொல்கிறான். அதே மாதிரி சுயம்புவும் சரி. இந்தப் பொண்ணு சொல்ற மாதிரி அவளுக்கே தெரியாம தப்பு நடந்ததுன்னே வச்சிக்குவோம். அது அடுத்தடுத்த நாள்ல கூட தெரியாமலா இருந்துருக்கும்? அதை ஏன் இவ்ளோ நாளா மறைக்கணும்? எங்கக்கிட்ட வந்து எனக்கு இந்த மாதிரி ஆகிடுச்சு.

எனக்கு ஒரு தீர்ப்பு கொடுங்கன்னு உடனே கேட்டுருந்தா கூட நாங்க ஏதாவது பண்ணிருப்போம். அதை விட்டுவிட்டு ஏன் இவ்ளோ நாளா மறைக்கணும்னு கேட்கிறான் சுயம்பு. அதே நேரம் அன்புவின் மேல் தான் சந்தேகம். அதை அவனே ஒத்துக்கிட்டான். செஞ்ச தப்பை நானே ஏத்துக்குறேன்னு சொல்றான். அப்படி அவன் ஏன் சொல்லணும்? களங்கப்பட்டு இருந்தாலும் பரவாயில்லை. நானே கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றான்?

அதை ஏன் சொல்லணும்? அப்படின்னா தப்பு நடக்காமலா இருக்கும்? ஆனந்தியைப் பெத்தவங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களோ இல்லையோன்னு பயந்து குறுக்கு வழியில இதுதான் சரியான வழின்னு நினைச்சிக்கூட தப்பைப் பண்ணிருக்கலாம். இதைப் பண்ணிட்டா நாம எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும் கல்யாணம் முடிச்சிக்கலாம்னு நினைச்சிக்கலாம் என சுயம்பு சொல்கிறான்.


இதற்கிடையில் ஆனந்தியின் அம்மா இவங்க எல்லாரும் சொன்ன மாதிரி காசு பணத்துக்காகப் பட்டணத்துக்கு அனுப்பிட்டேனேன்னு நினைக்கும்போது என் நெஞ்சே வெடிக்குதடி... உன் அக்காவைப் பாருடி... கட்டுன தாலியோட உன் அக்காவும், அத்தானும் பஞ்சாயத்துல வந்து கூனிக் குறுகி நிக்கிறாங்க... இதுக்காகவாடி நீ ஆசைப்பட்டே...? ஏ... ஆனந்தி... என்ன பெத்தவளே இப்பவாவது அந்த அன்பு தம்பி தான் இதுக்கு எல்லாம் காரணம்னு சொல்லி என் வயித்துல பாலை வாரு தாயின்னு கதறி அழுகிறாள். அதற்கு ஆனந்தி இல்ல. இல்ல. இதுக்கெல்லாம் காரணம் அன்பு இல்லை. இந்த அக்கிரமம் நடக்கும்போது அவரும் நானும் பழகவே இல்லை. எங்களுக்குள்ள எந்த நெருக்கமும் இல்லை. அவரு மூச்சுக்காத்துக் கூட என் மேல பட்டதுல்லன்னு சொல்கிறாள் ஆனந்தி.

நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் கட்டுக்கோப்பு இல்லாம அங்க இருக்கல. உங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரோடும் வாழும்போது எவ்வளவு பாதுகாப்பு இருக்குமோ அதை விட ஒரு படி மேலாகத்தான் அன்புவும், வார்டனும் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அன்பு காட்டுன அந்தப் பாசமும், நேசமும்தான் எனக்கு அவர் மேல காதலா மாறினது. அவர் எனக்காக எத்தனையோ பழியை சுமந்துட்டாரு என கதறி அழுகிறாள் ஆனந்தி. அடுத்து என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story