Singapenne: பஞ்சாயத்துல ஆனந்திக்கு என்ன தீர்ப்பு? எல்லாமே சுயம்புக்கு சாதகமால்ல இருக்கு?!

by Sankaran |
aanandhi, suyambu
X

சிங்கப்பெண்ணே: ஆனந்தி கதறி அழுதபடி அவர் சொல்றது எல்லாம் உண்மைதான். என்னை மன்னிச்சிடுங்கப்பான்னு சொல்கிறாள். ஆனால் அவளது இந்த நிலைக்கு யார் காரணம்னே தெரியலப்பான்னும் சொல்கிறாள். ஆனந்தி கம்பெனியில் நடந்த சில்வர் ஜூப்ளி பங்ஷன் நடந்தபோது நடந்த சம்பவங்களைச் சொல்கிறாள்.

அதைக் கேட்டதும் அவளது அம்மா ஐயோ உன்னை வேலைக்கு அனுப்பிருக்கக்கூடாது. இந்தக் களங்கத்தை நான் எப்படி துடைப்பேன்னு அழுகிறாள். அதைக் கேட்டு அழகப்பனும் மனம் வெதும்புகிறார்.இதனால் கல்யாண வீடே ஸ்தம்பித்து நிற்கிறது. அழகப்பன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

ஆனந்தியின் அம்மாவும் கையைப் பிசைகிறார். ஆனால் அன்பு மட்டும் யார் என்ன சொன்னாலும் சரி. ஆனந்தியை நான் மனசாரக் காதலிக்கிறேன். இந்த மாதிரி சூழ்நிலையில தான் ஆனந்திக்கு நான் கைகொடுக்கணும். இல்லன்னா இவ்ளோ நாளும் நான் காதலிச்சது பொய்யாப் போயிடும். அதனால ஆனந்திதான் என் பொண்டாட்டின்னு அழுதபடி அன்பு சொல்கிறான்.

அதற்கு அன்புவின் அம்மா அந்த முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இல்ல. நான்தான் எடுக்கணும் என்கிறாள். நீ வா வீட்டுக்குப் போகலாம் என்கிறாள். அதற்கு அன்பு மறுக்கவே அவள் அரிவாளால் தன் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அன்பு அம்மாவுடன் செல்கிறான்.


துளசியும் அத்தை சொல்றதைக் கேளுங்க மாமா என்கிறாள். ஆனந்தியும் அன்புவோட பழகினது என்னோட பாக்கியம். ஆனால் களங்கமே இல்லாத அவர் மீது நான் கறையைப் பூச விரும்பல. இந்தக் கல்யாணம் முடிஞ்சதும் நானே எங்காவது காணாமப் போயிடணும்னுதான் நினைச்சேன்னு கதறி அழுகிறாள். உடனே அப்புறம் என்ன ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்ட வேண்டியதுதான் என்கிறான் சுயம்பு.

பஞ்சாயத்துல இதுவரைக்கும் எத்தனையோ பிராது வந்துருக்கு. திருட்டு, சண்டைன்னு. ஆனா இங்க அழகப்பனோட மகள் சொல்றது புதுசா இருக்கு. என் கர்ப்பைக் காணோம். யார் சூறையாடினான்னு தெரியல என்கிறாள். இதைவிடக் கேவலம் என்ன வேணும்? என்று பஞ்சாயத்துப் பெரியவர்கள் சொல்கிறார்கள். அப்போது அழகப்பன் நான் எந்தளவுக்குக் கேவலப்படணுமோ பட்டுட்டேன்.

என் குடும்பத்தையும் என்னையும் தலைகுனிய வச்சிட்டீங்க. இதுக்கு மேலும் என்னால தாங்க முடியாதுன்னு சொல்கிறான். அதுக்கு ஊர்ப்பெரியவர் ஒருவர் என்ன அழகப்பா நாங்க ஏதோ தப்பு செஞ்சிட்ட மாதிரியும் நீ எதுவுமே தப்பே செய்யாத மாதிரியும் பேசுற. உன் பொண்ணுதான் தான் களங்கமானவள்னு ஒத்துக்கிட்டாளே.

அப்புறம் என்ன பஞ்சாயத்துல சொல்லணுமோ அதுபடி தீர்ப்பை சொல்ல வேண்டியதுதானே. இது க்கு யார் காரணம்னு கண்டிப்பா ஆனந்திக்குத் தெரிஞ்சிருக்கும். இதுமாதிரி பொண்ணுகளால ஊருல இருக்குற மற்ற பிள்ளைகளும் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கு. முறைப்படி என்ன தீர்ப்பு சொல்லணுமோ சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்கிறார்.

அப்போது சுயம்பு ஊர் தலைவராக கம்பீரமாக இருந்து கொண்டு எல்லாரும் சொல்வதையும் அமைதியாகக் கேட்கிறான். ஆனந்தி தலைகுனிந்து அழுதபடி நிற்கிறாள். அடுத்து அவன் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறான் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story