singapenne: துளசியைக் கட்டுவானா அன்பு? ஆனந்தி தன்னோட நிலைக்குக் காரணமானவனைக் கண்டுபிடித்தாளா?

by Sankaran |   ( Updated:2025-08-04 16:52:19  )
anbu, aanandhi
X

சிங்கப்பெண்ணே: சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. கோகிலாவின் கல்யாணம் நடந்ததும் ஆனந்தியின் கர்ப்பம் சுயம்பு மூலம் வெளியே தெரிந்தது. அது பஞ்சாயத்து வரை பூதாகரமாக வெடித்து ஆனந்தியின் குடும்பத்தைத் தள்ளி வைத்தது. ஆனந்தி இதுக்குக் காரணமானவனைக் கண்டுபிடிச்சி உங்க முன்னாடி நிறுத்துறேன்பான்னு சபதம் செய்கிறாள்.

அதற்கு உறுதுணையாக அவளது மொத்தக் குடும்பமும், தோழிகளும் நிற்கின்றனர். அன்புவும் உடன் இருக்கிறான். ஆனந்தியுடன் அக்கா கோகிலாவும் உடன் செல்கிறாள். அப்பா, அம்மாவும் வருவதாகச் சொன்னபோது நீங்க இங்கேயே இருப்பதுதான் நல்லதுன்னு சொல்கிறாள் ஆனந்தி. இல்லன்னா ஊருக்குப் பயந்து போன மாதிரி இருக்கும்னு சொல்ல பெற்றோர்களும் அங்கேயே இருக்கின்றனர். இந்த நிலையில் அன்புவின் அம்மா துளசிக்கும், உனக்கும் அடுத்த முகூர்த்தத்துல நிச்சயதார்த்தம்.

அதற்கு அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்னு சொல்கிறாள். இது அன்புவுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. ஏம்மா எரிகிற வீட்டுல புடுங்கினது மிச்சம்னு சொல்ற மாதிரி பேசுற..?ன்னு அன்பு கோபப்படுகிறான். ஆனந்தி தன்னோட கற்பை சூறையாடியவன் யாருன்னே தெரியாம கலங்கி நிற்கிறாள்.


இந்த நேரத்துல என் கல்யாணம் அவசியமான்னு கேட்கிறான். அதுக்காக வயித்துல இன்னொருத்தன் பிள்ளையை சுமக்கிறவளுக்கு நான் என் புள்ளையைக் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு அன்புவின் அம்மா சொல்கிறாள். அதற்கு துளசியின் பெற்றோரும் சம்மதிக்கின்றனர். அதே நேரம் அன்புவிடம் நீ ஆனந்தி கூட கல்யாணம் நடக்காத பட்சத்தில் துளசியைக் கல்யாணம் முடிப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்கே. மறந்துடாதேன்னு சொல்கிறாள். அதற்கு அன்பு ஆனந்தி தான் என்னோட பொண்டாட்டி. அதுல நான் உறுதியா இருக்குறேன்.

அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் யாருன்னு கண்டுபிடிச்சி அவளைக் களங்கம் இல்லாதவள்னு நிரூபிப்பேன்னு சொல்கிறான் அன்பு. அதே நேரம் அவனது அம்மாவிடம் மீறி நீங்க துளசிக்குத் தான் கல்யாணம் கட்டி வைக்கிறதா சொன்னா நான் இருக்க மாட்டேன். நான் இருந்தா தானே கல்யாணம் முடிப்பீங்கன்னு சொல்லிக் கிளம்புகிறான். அதே நேரம் துளசியின் பெற்றோர் அன்பு இந்த நிலையிலும் ஆனந்தியின் மீது உயிராக இருக்கிறான்னா அது சாதாரண விஷயமல்ல. அதனால அவசரப்பட்டு கல்யாணத்தை வச்சிட்டு அவங்களோட வாழ்க்கையை சீரழிச்சிடக் கூடாது. கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்னு சொல்கிறான். அதே நேரம் துளசி என் மாமாவை இன்னொருத்தரோட பிள்ளையை வயித்துல சுமந்து களங்கப்பட்டவளுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்க சம்மதிக்க மாட்டேன். இனி அவரோட மனசுல இருந்த ஆனந்தியைத் தூக்கி எறிஞ்சிட்டு நான் மெல்ல மெல்ல இடம்பிடிப்பேன்னு சூளுரைக்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story