Singappenne: ஜெட் வேகத்தில் செல்லும் சிங்கப்பெண்ணே.. ஆனந்தி தன் காதலைச் சொல்லிவிட்டாளா?

அன்பு, ஆனந்தியின் காதல் இக்கட்டான சூழலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் வார்டன் மகேஷூக்கு ஆனந்தியை மணமுடித்து வைப்பதற்காக ஆனந்தியின் அப்பாவிடமே சென்று பெண் கேட்டார். அதற்கு சந்தர்ப்ப சூழலில் அவரும் 'ஓகே' சொல்லிவிட அது மகேஷூக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் இந்த விவரம் ஆனந்திக்குத் தெரிய வர நேராக வார்டனிடம் போய் ஏன் இப்படி செய்தீர்கள் என குமுறுகிறாள். அதன்பிறகு அன்புடனான தன் காதலைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னதும் மகேஷை மீண்டும் வரவழைக்கிறார் வார்டன்.
அவனிடம் பக்குவமாக எடுத்துக்கூறி கடைசியில் ஒருவேளை ஆனந்தி கிடைக்காவிட்டால் என்ன செய்வாய் என கேட்கிறாள். செத்துடுவேன்னு மிரட்டுகிறார் மகேஷ். உடனே செய்வதறியாமல் திகைக்கிறார் வார்டன். அதே நேரம் ஆனந்தியின் அன்புவுடனான காதலை நேரில் பார்க்கும் மகேஷின் அம்மா பார்வதி மனதுக்குள் கொதிக்கிறாள்.
அவள் உடனே ஆனந்தியை நாம் பழிவாங்க வேண்டும் என்று எண்ணி அலுவலர்கள் முன்னிலையில் கம்பெனியில் மகேஷ், ஆனந்தி திருமணம் என அறிவிக்கிறார். ஆனந்திதான் என் மருமகள் என்கிறார். இன்னும் ஒரு படி மேல் போய் ஆனந்தியின் அந்தஸ்தை உயர்த்த மகேஷூக்கு அடுத்தபடியாக கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை ஆனந்திக்கு வழங்குகிறார்.
இதைக் கண்டு மிரண்டு விடுகிறார் ஆனந்தி. மீண்டும் வார்டனிடம் போய் சொல்ல வார்டன் பார்வதியிடம் பேச, உன் பேச்சை நான் கேட்பதா என கெத்தாகச் சொல்கிறார் பார்வதி. அதுமட்டும் அல்லாமல் ஆனந்திதான் என் மருமகள் என்றும் சொல்லி விடுகிறார்.
இனியும் நாம் பொறுமையாக இருக்கக்கூடாது என்று சொல்லும் ஆனந்தி அன்புவிடம் நமது காதலை மகேஷிடம் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்கிறாள். இனி என்ன நடக்கும் என்பதையும் புரொமோவிலேயே காட்டுகிறார்கள். 'என் கூடவே இருந்து எனக்குத் துரோகம் பண்ணிட்டீயேடா வெளியே போடா'ன்னு மகேஷ் அன்புவை அடித்துத் துரத்துவதாகக் காட்சி வருகிறது. இது நாளைய எபிசோட்டில் வரும் என்றும் தெரிகிறது.
இந்தக் காட்சிக்கு முன்னதாக நான் அன்பைத் தான் காதலிக்கிறேன்னு ஆனந்தி சொல்லி விடுகிறாள். அந்த வகையில் சிங்கப்பெண்ணே கதைகளம் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாகச் செல்கிறது.