சிங்கப்பெண்ணே: தாலியுடன் புறப்படும் அன்பு... பிடிகொடுப்பாளா ஆனந்தி?

by SANKARAN |
anpu, thulasi
X

கோவிலில் பூஜை முடித்த கையோடு அன்னதானம் நடக்கிறது. ஆனந்தி பெற்றோருடன் ஊருக்கு வந்த மாப்பிள்ளை வீட்டாரை தடபுடலாக விருந்து வைத்து கவனிக்கிறாள். அப்போது சுயம்பு வந்து வம்பு இழுக்கிறான். மாமா நானும் சொந்தக்காரன் தான். இந்த வீட்டுல நடக்கப் போற கல்யாணத்துக்கு இழுத்துப் போட்டுக்கிட்டு எல்லா வேலையையும் செய்யணும்னு பார்க்குறேன்னு லந்து கொடுக்கிறான்.

அது மட்டுமல்லாமல் அடடே, கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையும், பொண்ணும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறாங்கன்னு சொல்லி கிண்டல் பண்ணுகிறான். அதற்கு இதை நாங்களே கவனிச்சிக்கறோம். நீ வேணும்னா அன்னத்தானத்துல உட்கார்ந்து சாப்பிட்டுட்டுப் போன்னு அழகப்பன் சொல்லி விடுகிறான். உடனே ஆனந்தி அந்தப் பிரசாதத்தைக் கொஞ்சம் கையில கொடு. நீ கொடுத்தா அந்த அம்மனே வந்து கொடுத்த மாதிரி இருக்குன்னு சொல்லி சுயம்பு பிரசாதத்தை ஆனந்தியிடம் இருந்து வாங்கி விடுகிறான்.

மாப்பிள்ளை ஆனந்தியிடம் அக்காவைப் பத்தி உனக்கு எல்லாமே தெரியுமாமே. ஏதாவது சொல்லுன்னு கேட்கிறார். அதற்கு எங்கா அக்காவுக்கு நான்னா உசுரு. அதுக்கு அப்புறம் மூணாவது ஆளு மேல உசுரா இருக்குறான்னா அது உங்க மேல தான். எங்க அக்காவைக் கட்டுறவங்க கொடுத்து வச்சிருக்கணும். எங்க வீட்டுத் தங்கத்தை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம்.

அதை சந்தோஷமா வச்சிக்கோங்க என்கிறாள் ஆனந்தி. அதே நேரம் உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லுன்னு கோகிலாவிடம் மாப்பிள்ளை கேட்கிறார். ஆனந்தி சொன்ன மாதிரி ஆசை ஒண்ணும் இல்லை. ஏக்கம் இருக்கு. என் தம்பி வேலு கல்யாணத்துக்கு வரணும். அவன் மட்டும் கலந்துக்கலன்னு வருத்தமா இருக்கு. ஒரு பொண்ணைக் காதலிச்சிக் கூட்டி வந்ததுக்கு அப்பா அவன் மேல ரொம்ப கோபமா இருக்காரு. அவரை சம்மதிக்க வைக்கணும்.

சொல்லி புரிய வைக்கணும்னு வருத்தமுடன் சொல்கிறாள் கோகிலா. அது கேட்டு நானும் கேள்விப்பட்டேன். சென்னைக்கு வந்து ஆனந்தியைப் பார்க்க வந்தபோது கூட அவரை உங்க அப்பா துரத்தி விட்டதா சொன்னாங்க. இப்ப என்ன செய்றதுன்னு தெரியலன்னு மாப்பிள்ளை சொல்கிறார். அக்காவிடம் ஆனந்தி நான் அப்பாவிடம் சொல்லி புரிய வைக்கிறேன்.

கண்டிப்பா அண்ணன் கல்யாணத்துக்கு வருவான். நீ கவலைப்படாதே அக்கா என்கிறாள் ஆனந்தி. இதற்கிடையில் ராத்திரி நேரத்துல மாப்பிள்ளை வீட்டாரை எங்க தங்க வைக்கிறதுன்னு அழகப்பன் கோவில் பூசாரியிடம் விசாரிக்கிறான். அவரும் பக்கத்து வீடு காலியா இருக்கு. அதை நான் விசாரிக்கிறேன்னு சொல்றாரு. அதே நேரம் சுயம்பு வந்து நாங்க எதுக்கு இருக்கோம்?

நம்ம பங்களா, தோட்டம் எல்லாம் இருக்கு. அங்க வந்து தங்கட்டும். மாப்பிள்ளை வீட்டாரை கல்யாணம் நாள் வரை பத்திரமா பார்த்துக்கறேன்னு சொல்கிறான். நாங்களே பார்த்துக்கறோம். அது என் பொறுப்பு என்கிறான் சுயம்பு. உன் பொறுப்பு தேவை இல்லை என்கிறாள் ஆனந்தி. நல்லதோ, கெட்டதோ நாங்க பார்த்துக்கறோம். மாப்பிள்ளை வீட்டாருக எங்களை நம்பித்தான் வந்துருக்காங்க. அதனால நாங்களே அவங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்குறோம் என்கிறாள் ஆனந்தி.


என்ன ஆனந்தி சென்னையில இருக்கும்போது நல்லா பேசுன. இப்ப வெட்டி விடுறன்னு சுயம்பு கோபப்பட்டு அங்கே இருந்து செல்கிறான். மாப்பிள்ளையோ உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்க காரைக்குடியில ஏதாவது ஒரு ரூம் எடுத்து தங்கிக்கறோம்னு சொல்கிறார். அதற்கு ஆனந்தி சம்மதிக்கவில்லை. நாங்களே பார்த்துக்கறோம். என்ன கொஞ்சம் வசதி குறைவா இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்கிறாள் ஆனந்தி. உங்க அக்காவைப் பார்த்துட்டு இருக்கும்போது எனக்கு அதுலாம் குறையா தெரியாதுன்னு மாப்பிள்ளை புன்முறுவலுடன் சொல்கிறார்.

இதற்கிடையில் துளசி அன்புவிடம் தாலியை நீட்டி இதை ஆனந்தி கழுத்தில் கட்டு. கோகிலாவின் கல்யாணம் வரை தான் அத்தை வெயிட் பண்ணுவாங்க. இதுதான் அவங்க கடைசியா நம்பி இருக்குறது. கோகிலா கல்யாணம் முடிந்ததும் ஆனந்தி பக்கம் இருந்து எந்தப் பதிலுமே வரலன்னா தைரியமா இந்தத் தாலியைக் கட்டு. எல்லா நேரமும் நல்லவனா இருந்தா மட்டும் போதாது.

வல்லவனாவும் இருக்கணும்னு அன்புவை உசுப்பி விடுகிறாள் துளசி. அன்புவும் தாலியுடன் அங்கிருந்து ஆனந்தியோட சேர்ந்து வாழ நான் எந்த எல்லைக்கும் போவேன்னு சொல்கிறான்.

Next Story