சிங்கப்பெண்ணே: அம்மனிடம் வேண்டும் ஆனந்தி... மாப்பிள்ளை வீட்டார் இப்படியா பேசுவாங்க?

by SANKARAN |   ( Updated:2025-07-01 17:32:19  )
aanandhi, anpu
X

அன்பு ஆனந்தியிடம் போனில் பேசுகிறான். அவள் போனை எடுத்த உடன்தான் அவனுக்கு நிம்மதியே வந்தது. அன்புவோட கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு அவன் சொல்கிறான். அப்போது துளசி உங்களுக்கு நல்ல பொருத்தமான அவளை விட்டுராதீங்க. கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு ஆனந்தி சொல்கிறாள். இது அன்புக்கு எரிச்சலைத் தருகிறது.

அதே நேரம் மாப்பிள்ளை வீட்டாரும் வந்து விடுகிறார்கள். அவர்கள் அங்கு தங்க வேண்டிய சூழல் வருகிறது. கல்யாணம் வரை தங்கி விட முடிவு செய்கின்றனர். அதற்கு அழகப்பன் முதலில் தயங்க, ஆனந்தியின் தைரியத்தில் அரைகுறையா சம்மதிக்கிறார்.

அவர்கள் வீட்டுல உள்ள இன்னொரு பையன் அமெரிக்காவுல இருக்கானாம். அவனுக்கு தமிழ் பொண்ணு அதுவும் கிராமத்துப் பொண்ணுதான் வேணும்னு சொல்றானாம். அதே நேரம் மாப்பிள்ளை அம்மா இங்க ஆனந்திங்கறது யாருன்னு கேட்கிறாள். அப்போது அழகப்பன் இதுதான் என் மகள் ஆனந்தி. டவுன்ல இருந்து அவளோட 2 தோழிகள் என்று அறிமுகப்படுத்துகிறான்.

அதற்கு ஆனந்தியை ஆம்ளை பிள்ளை மாதிரி கொண்டாடுறாங்க இங்கே. எல்லா வீட்டுலயும் ஆம்பளைபிள்ளையத் தான் கொண்டாடுவாங்க. இந்த ஆனந்தி ஒரு கல்யாணத்தையே நடத்தி வைக்கிறான்னா அவள் எவ்வளவு சூதானமா நடந்துருக்கணும்னு குத்திக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் அழகப்பன் ஆனந்தியிடம் அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டாருங்க தங்குனா ஊருசனம் என்ன சொல்லும்னு தயக்கம் காட்டுகிறார். அதற்கு ஆனந்தி ஊரு 1000 சொல்லும். அதைத் கண்டுக்காதீங்கன்னு ஆனந்தி சொல்கிறாள். அது இல்லம்மா இங்க தங்க இடம் வேணுமேன்னு சொல்றேன்னு தயங்குகிறார் அழகப்பன்.


இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு அம்மனை வேண்டுகிறோம். மாப்பிள்ளை வீட்டாரு அன்னதானம் போடுறாங்கன்னு அழகப்பன் சொல்கிறார். இதற்கிடையில் மித்ரா அன்புவையும் ஆனந்தியையும் சேர்த்து வைங்க. இல்லாட்டான்னு வார்டனிடம் பிளாக்மெயில் பண்ணுகிறாள் மித்ரா.

இதற்கிடையில் வேண்டுதலை நீதான் நிறைவேற்றித் தரணும்னு ஆனந்தி அம்மனிடம் வேண்டுகிறாள். இவ்வளவு தூரம் இந்த கல்யாணத்தைக் கொண்டு வந்ததே உன்னோட அருள்தான்னு ஆனந்தி சொல்கிறாள். ஊருல பலரும் பலவிதமா சொன்னாங்க. ஆனா இந்த கல்யாணத்தை அவங்களுக்கு முன்னா நடத்திக் காட்டி குடும்பம் தழைத்தோங்க தாயே கருணை காட்டுன்னு ஆனந்தி மனமுருக வேண்டுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Next Story