சிங்கப்பெண்ணே: கர்ப்பிணிக்கு அன்பு காட்டிய இரக்கம்..! ஆனந்தி மனம் மாறினாளா?

சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.
கர்ப்பிணிப்பெண்ணை அவதூறாகப் பேசி சாப்பாடுலாம் இல்ல போன்னு விரட்டி அடித்தாள் மரகதம். அதைப் பார்த்து ஆனந்தியும், அன்புவும், ஆனந்தியின் அம்மாவும் பரிதாபப் பட்டனர். இருந்தாலும் ஊரின் கட்டுப்பாட்டை மீற முடியாமல் ஆனந்தியின் அம்மாவும் ஒன்றும் பேசாமல் வீட்டிற்குள் போய்விட்டார்.
மரகதம் கர்ப்பிணிப் பெண்ணை அடித்துத் துரத்தினாள். அதைப் பார்த்து இரக்கப்பட்டுக் கொண்டே ஆனந்தியும் வீட்டிற்குள் செல்கிறாள். ஆனந்திக்கு அந்தக் கர்ப்பிணிப் பெண் ஊர் எல்லையில் தான் இருப்பாள். போய் சாப்பாடு கொடுக்கலாம் என்று ஒரு தூக்குச்சட்டியில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு செல்கிறாள்.
அதே நேரம் அங்கு அன்பு அவளுக்கு சாப்பாடு கொடுக்கிறான். அந்தப் பெண்ணின் இந்த நிலைக்கு யார் காரணம் என கேட்கிறான். திருவிழா சமயத்தில் காலிப்பசங்களின் கொடூர விளையாட்டு. எனக்கே என்ன நடந்ததுன்னு தெரியலன்னு கதறி அழுகிறாள் அந்தக் கர்ப்பிணி. ஆனால் நான் ஒருவனைக் காதலித்ததால் ஊரார் அதுதான் காரணம் என தவறாகப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.
எங்க வீட்டுலயும் ஒதுக்கிட்டாங்க. என் காதலனும் ஒதுக்கிட்டான்னு சொல்லவும் அன்பு மனதில் உள்ளதைக் கொட்டுகிறான். உங்களை அறியாமல் நடந்த இந்த தவறுக்கு நீங்க பலியாக முடியாது. உங்க குடும்பத்தாரும், உங்க காதலனும் கட்டாயமாக இதுக்கு தண்டனையை அனுபவிப்பாங்க. தன்னோட காதலி இப்படி ஒரு நிலைமையோட இருக்கும்போதுதான் ஒரு காதலன்னா அவளுக்கு ஆதரவா இருக்கணும்.
அவன்தான் உண்மையான ஆம்பளை என்கிறான் அன்பு. அதைத் தூரத்தில் நின்று கேட்கும் ஆனந்தி மெய்மறந்து நிற்கிறாள். அன்பு சாப்பாடு கொடுத்த பின் ஆனந்தியும் தன்னோட சாப்பாட்டை எடுத்துக் கொண்டு திரும்பி விடுகிறாள்.
இதற்கிடையில் மகேஷூம், மித்ராவும் கல்யாணத்துக்குக் கிளம்புகிறார்கள். மகேஷ் ஆஸ்டல் வார்டனையும் அழைத்துச் செல்ல வேண்டும். அதுதான் நல்லதுன்னு சொல்கிறான். அதற்கு மித்ரா இப்போ ஏன் அவங்கன்னு கேட்கவும், அவங்க தான் அன்புவையும், ஆனந்தியையும் சேர்த்து வைக்க ஆனந்தியோட அப்பா அம்மாகிட்ட பேசுவாங்க. அவங்க சொன்னாதான் கேட்பாங்கன்னு சொல்கிறான்.
அதனால் ஆஸ்டல் வார்டனைக் கூப்பிடச் செல்கிறான். அவங்களோ எனக்கு பேங்க்ல முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றாங்க. அந்த வேலையை நான் செய்றேன்னு மகேஷ் எவ்வளவோ சொல்லியும் வார்டன் வரவில்லை. வேலை இருக்குன்னு சொல்லி நழுவி விடுகிறாள். இதனால் மகேஷ் ஆனந்தியும் இப்படித்தான் குழப்புனாங்க. இப்போ நீங்களும் இப்படித்தான் குழப்புறீங்கன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.
அதே நேரம் ஆனந்தி ஏதோ ஒரு சோகத்தில் இருப்பதைப் பார்த்த அன்பு என்ன ஆனந்தி கர்ப்பத்தை நினைச்சிக் கவலைப்படுறீயான்னு கேட்கிறான் அன்பு. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஆனந்தி. உடனே உனக்கு அந்தக் கர்ப்பிணிப்பெண்ணைப் பார்த்ததும் உதவ முடியலையேன்னு கவலைப்பட்டதைப் பார்த்தேன்.

உடனே அந்தப் பொண்ணு என்ன தப்பு செஞ்சது? ஊர் தள்ளி வச்சதுங்கறதுக்காக இந்த ஊர்க்காரங்க வேணா அந்தப் பொண்ணுக்கு சாப்பாடு கொடுக்காம இருக்கலாம். ஆனா நான் வெளியூர்க்காரன். அப்படி இருக்க மாட்டேன். இந்த ஊருல இருக்குற வரைக்கும் நான் சாப்பாடு கொடுத்துக்கிட்டே இருப்பேன்னு சொல்கிறான்.
அதன்பிறகு நம்ம ரெண்டு பேரும் சேருவதை யாராலும் தடுக்க முடியாது. நீ மட்டும் ஏன் இப்படிப் பேசுறன்னு அழுதபடி ஆனந்தயைக் கட்டி அணைக்கிறான். ஆனந்தியும் அவனைக் கட்டி அணைக்கிறாள். இனி அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.