Singappenne: கோகிலாவின் கல்யாணத்துக்கு வந்த வேலு... சுயம்பு எதிர்க்க கோபத்தில் வெடித்த ஆனந்தி

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இன்று நடந்த எபிசோடின் சுருக்கத்தைப் பார்க்கலாம்.
ஆனந்தியின் அக்கா கோகிலாவின் கல்யாணம் களை கட்டத் தொடங்குகிறது. ஆளாளுக்கு ஓடி ஓடி நலங்கு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருக்கின்றனர். சேகர் தன் பங்கிற்கு இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது என்று சதி செய்கிறான். ஏன்னா கோகிலாவை முதலில் இவனுக்குத் தான் கட்டித் தருவதாக அழகப்பன் வாக்குறுதி கொடுத்தார்.
அப்போது இருந்த சூழலில் அவர் அப்படி சொல்லி விட்டார். ஆனால் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு சேகர் அலைகிறான். அவனை உசுப்பி விடும் வகையில் அவனது நண்பன் சுயம்பு வேலை பார்க்கிறான். இந்த நிலையில் ஆனந்தியின் அக்கா கோகிலாவுக்கு மயக்க மருந்தை மயிலு பாட்டியின் மூலம் கொடுக்க வைக்கிறான்.
அதே நேரம் நலங்கு வைக்கிற நேரம் நெருங்கும்போது மாப்பிள்ளை சரவணன் முக்கியமான ஆள் வரலயேன்னு சொல்கிறான். அது யாரு மாப்பிள்ளேன்னு அழகப்பன் கேட்க கோகிலாவின் தம்பி வேலு, அவனது மனைவி வாணின்னு சொல்கிறான். அவங்க வராதது கோகிலாவுக்கும், ஆனந்திக்கும் குறை என்கிறான்.
கல்யாணத்துக்கு மகேஷ், மித்ரா உள்பட பலரும் வந்து விடுகின்றனர். கூடவே ஆனந்தியின் அண்ணன் வேலுவும், அண்ணியும் வருகிறார்கள். அப்போது ஆனந்தியின் அம்மா எதிர்ப்பு தெரிவிக்க ஆனந்தி அண்ணனுக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறாள். நம் குடும்பத்தைப் பிரிக்க ஒரு கூட்டம் சதி செய்து கொண்டு இருக்கிறது.
அவங்க கிட்ட நாங்க எப்பவுமே ஒண்ணுதான்னு நாம தான் நிரூபிக்கணும். அதுக்காக அண்ணனை நாம இந்தக் குடும்பத்துல சேர்க்கணும். அண்ணனைப் பற்றி எங்கோ ஒரு மூலையில் அப்பாவுக்கே பாசம் இருக்கு. அதனாலதான் அன்னைக்கு அண்ணனைத் திட்டி விட்டு நான் அப்படி பேசிருக்கக்கூடாதுன்னு ஃபீல் பண்ணினார்.

அதனால அண்ணனை இனிமேலாவது சேர்த்துக்கறதுதான் நல்லது என்கிறாள் ஆனந்தி. அப்போது அது எப்படி நல்லதாகும்? ஊர்க்காரங்க இவனைப் பார்த்து யாரையாவது நாமும் கூட்டிட்டுப் போய் அப்பா அம்மா பேச்சைக் கேட்காம கல்யாணம் பண்ணலாமேன்னு நினைக்க மாட்டாங்களா? அதுக்கு அப்புறம் கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நின்னா சேர்த்துக்குவாங்கன்னு எண்ணம் வராதா? என்கிறான் சுயம்பு.
அது மட்டுமல்லாமல் சுயம்பு இதெல்லாம் சேர்த்துக்க முடியாது. நீங்க சம்மதிக்காதீங்க. நான் உங்க கூட இருக்கேன் மாமான்னு சுயம்பு சொல்கிறான். அப்போது ஆனந்தி கோபத்துடன் நிப்பாட்டுய்யான்னு சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.