சிங்கப்பெண்ணே: ஆனந்தியிடம் அன்பு சொன்ன வார்த்தை... கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் சுயம்பு!

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்தை மயிலு தெரிந்து கொண்டு அதை சேகரிடம் சொல்கிறாள். ஆனால் அவன் போட்ட திட்டம் வேறு ஆதலால் அதை அப்படியே மனதுக்குள் வைத்துக் கொள்கிறான். தொடர்ந்து அன்பு ஆனந்தியை அழைத்து ஒரு சேலையை கிஃப்டாகக் கொடுத்து இதைத்தான் நாளைக்கு கல்யாண வீட்ல நீ போட்டுக்கணும்னு சொல்கிறான்.
இது எதுக்குன்னு கேட்கிறாள். என் பொண்டாட்டிக்குத் தானே வாங்கிக் கொடுக்குறேன்னு சொல்கிறான் அன்பு. என்னது பொண்டாட்டியா என்கிறாள். ஆமா தாலி மட்டும்தான் கட்டல. அதுதான் பாக்கின்னு சொல்கிறான் அன்பு. நீ ஆசைப்பட்ட மாதிரி உன் அக்கா கல்யாணத்தைப் பெரிசாத்தான் பண்றேன்னு ஜெயந்தி சொல்கிறாள். முத்துவும் உடன் இருக்கிறான்.
அப்போது முத்து ஒரு பார்சலைக் கொடுக்கிறான். அதை அன்புகிட்ட கொடுன்னு சொல்கிறான். என்ன அதுன்னு அன்பு கேட்க உனக்கு ஒரு வேஷ்டி சட்டை வாங்கி வர ஆனந்தி சொன்னது. அதை ஏன் இப்ப சொல்றீங்கன்னு ஆனந்தி முத்துவிடம் கேட்கிறாள். ஆனந்தி எனக்காகத் தானே வாங்கி வரச் சொல்லிருக்கே. அதைக் கொடு. என்னைவிட்டு நீ எங்கேயும் போக முடியாதுன்னு சொல்கிறான் அன்பு.
இதற்கிடையில் நான் நினைச்சதுன்னு நடக்கலன்னா கல்யாணத்தையே நிறுத்திடுவேன். வாழ்க்கையில ஜென்ம பகை அழகப்பன்னா அதைவிட ஜென்ம பகை ஆனந்திதான். அவளை கல்யாணம் பண்ணி வாழ்க்கை முழுக்க என் அடிமையா ஆக்கிடுவேன்னு சொல்கிறான் சுயம்பு.

அதற்கு மித்ரா இவன் என்ன காரியத்தையே கெடுத்துடுவான்போல. கர்ப்பமான பொண்ணை எத்தனை பேருதான் கல்யாணம் பண்ணிக்க டிரை பண்ணுவாங்கன்னு மனதுக்குள் சொல்கிறாள் மித்ரா. அதன்பிறகு நீங்க பழிவாங்கறதுக்கு ஆனந்தி தான் கிடைச்சாளா? வேற யாரையாவது கட்டிக்கோங்க. ஆனந்திக்கு ஏற்கனவே கல்யாணத்துக்குப் பேசி முடிச்சிட்டாங்க.
அதன்பிறகு மகேஷைத் தானே சொல்றீங்கன்னு கேட்கிறான். இல்ல. கோகிலா மாப்பிள்ளையோட சித்தப்பா பையனுக்குப் பேசிட்டாங்கன்னு மித்ரா சொல்கிறாள். சுயம்பு என்ன செய்வதுன்னு புரியாமல் விழிக்கிறான். கோபாவேசத்துடன் கல்யாணத்தை நிறுத்த புறப்படுகிறான். உடன் சேகரும் செல்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.