Singappenne: வைர அட்டிகையைத் திருடிய வாணி சிக்கினாளா? கோகிலாவின் கல்யாணம் என்னாச்சு?

by SANKARAN |   ( Updated:2025-07-19 16:25:15  )
Aanandhi
X

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம்.

ஆனந்தி அக்கா கோகிலாவின் திருமணம் விடிந்தால் நடக்கப்போகிறது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரவு தடபுடலாக நடந்து முடிந்துள்ளது. மாப்பிள்ளையின் அண்ணன் மனைவி ஷோபோவின் வைர அட்டிகை திருடு போனது. திருடியது வேறு யாருமல்ல. வேலுவின் மனைவி வாணி. யாருக்கும் தெரியாமல் நகை மேல் உள்ள ஒரு ஆசையில் திருடி விட்டாள்.

ஆனால் ஷோபா வந்து பேக்கைத் திறந்து வைர அட்டிகையைப் பார்க்க அது இல்லாமல் பதறி விடுகிறாள். கீழே போய் சொந்தங்களிடம் சொல்லி அழுகிறாள். ஷோபாவின் கணவரோ இங்கு யாரோ தான் திருடி இருக்கணும். அவங்க யாருன்னு கண்டுபிடிச்சிக் கொடுங்க. இல்லன்னா போலீஸ்சுக்கு புகார் பண்ணப்போறேன்னு சொல்கிறார்.

அழகப்பனோ தம்பி கொஞ்சம் நிறுத்துங்க. இங்க யாரும் திருட மாட்டாங்க. கிராமத்துக்காரங்க. நாங்க எல்லாம் வீட்டைத் திறந்துதான் போட்டுட்டுப் போவோம். எதுவுமே திருடு போகாது. கல்யாணம் நடக்கும்போது போலீஸ் வந்தா நல்லாருக்காது. அந்தக் களங்கத்தைக் காலத்துக்கும் துடைக்க முடியாதுன்னு சொல்கிறார்.

மகேஷோ அந்த வைர அட்டிகை கிடைக்கலன்னா நானே அதை வாங்கித் தாரேன். பதற்றப்படாதீங்கன்னு சொல்கிறான். உங்க வீட்டுலயே திருடன் இருக்கான்னு ஷோபாவின் கணவர் சொல்ல அது வேலு என்றும் தெரிய வருகிறது. கடைசியில் அப்படின்னா அவனோட பேக்கை செக் பண்ணுவோம்னு சொல்கிறான்.


அதற்கு வேலுவும் என்னால பிரச்சனை வரக்கூடாது. என் பேக்கையும், என் மனைவி வாணியோட பேக்கையும் செக் பண்ணுங்கன்னு சொல்கிறான். மாப்பிள்ளை அப்படின்னா நம்ம சைடு யாரும் திருடி இருக்க மாட்டாங்களான்னு கேட்கிறான். கல்யாண வீட்டுல எல்லாரு பேக்கையும் செக் பண்றது தப்புன்னு சொல்கிறார் அழகப்பன்.

ஆனா சந்தேகம் இருக்குறவங்க பையை நீங்களே செக் பண்ணுங்கன்னு சொல்கிறார். அதன்படி வேலு, வாணி ஆகியோரின் பைகளை செக் பண்றாங்க. அதுல முதல்ல வேலுவோட பேக்கை செக் பண்ணிப் பார்க்குறாங்க. அதுல ஒண்ணும் இல்லை. அப்போது எல்லாருக்கும் நிம்மதி. தொடர்ந்து வேலோட பேக்கை மட்டும்தானே செக் பண்ணினோம்.


அவனோட மனைவி வாணியோட பேக்கை செக் பண்ணலியேன்னு சொல்கிறான். அனைவருக்கும் மீண்டும் பதற்றம் தொற்றுகிறது. வாணி முகத்தில் ஈயாடவில்லை. பதற்றத்தின் உச்சத்துக்கே போய்விட்டாள்.

வாணி வேலுவோட பொண்டாட்டி தானே. வேலு திருடி வாணியோட பேக்ல வச்சிருப்பான்லன்னு சொல்கிறார் ஷோபாவின் கணவர். அவளைப் பத்திப் பேசாதீங்க. அவள் பெரிய பணக்காரி. எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருக்கான்னு சொல்கிறான் வேலு. அதற்கு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவங்களுக்குத்தான் விட்டதைப் புடிக்கணும்னு தோணும்னு சொல்கிறாள் ஷோபா.

உடனே அண்ணியை சந்தேகப்படாதீங்க. எங்கூட வாங்க பேக்கை எடுத்துத் தர்ரேன்னு சொல்கிறாள். ஆனந்தி சோதனை போடுகிறாள். கடைசியில் வைர அட்டிகை சிக்குகிறது. அனைவரும் ஆச்சரியத்தில் பார்க்கின்றனர். ஆனந்தியும் அதிர்ச்சி தாங்காமல் அண்ணியையே பார்க்கிறாள். அடுத்து என்ன நடந்தது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story