சிங்கப்பெண்ணே: மகேஷ், அன்பு உயிருக்கு ஆபத்து... தப்பிக்கப் போவது யார்?

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று நடந்த சம்பவத்தின் கதைச்சுருக்கம். அன்புவின் மீது நடந்தது என்ன என்றே தெரியாமல் மகேஷ் தன்னைக் கொல்ல வந்தவன் அவன்தான் என பழியைப் போட்டு விடுகிறான். இதனால் போலீஸ் அன்பை பிடித்து ஜெயிலில் தள்ளி அடித்து துவம்சம் செய்கிறது. 'அவனிடம் இருந்து எப்படியாவது வாக்குமூலத்தை வாங்கி விடுங்கள். அவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி விடுங்கள்' என்று அரவிந்தன் அதிகாரியிடம் பேசி விடுகிறான்.
இதனால் உயர் போலீஸ் அதிகாரியும் அவனுக்குக் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிக்கு ஆர்டர் போடுகிறார். இந்த நிலையில் ஆனந்தியும், அன்புவின் அம்மாவும் மகேஷைப் பார்க்க ஜெயிலுக்கு வருகிறார்கள்.
அங்கு மகேஷ் அடிப்பட்டு நிலைகுலைந்து போயிருக்கும் காட்சியைப் பார்த்து மனம் உருகுகிறார்கள். அங்குள்ள போலீஸ் அதிகாரியிடம் 'என் புள்ளை சார். அவன் தப்பே செய்ய மாட்டான். அந்தப் பாழா போன மகேஷ் தான் இவன் மேல வீணாப் பழியை சுமத்திட்டான்'னு அன்புவின் அம்மா கொந்தளிக்கிறாள்.
அதே நேரம் 'அவரு மேல எதுவும் தப்பு இல்லம்மா'ன்னு அன்பு ஜெயிலில் இருந்தபடியே அந்த அடிபட்ட நிலையிலும் மகேஷூக்காகப் பரிந்து பேசுகிறான். அதே நேரம் மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயமாக உள்ளது எனவும் சொல்கிறான். இதற்கிடையில் ஆனந்தி வார்டன் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட மறுக்கிறாள்.

'என்னால தான மகேஷூம், அன்புவும் இப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க. நான் இல்லாம இருந்துருக்கணும்'னு புலம்பித் தவிக்கிறாள். அப்போது வார்டன் நீ நேரா மகேஷிடம் போய் நடந்த விவரத்தை எல்லாம் சொல். நீ சொன்னாதான் அவர் நம்புவாரு. நைட்டே போய் பாருன்னு ஆலோசனை சொல்கிறார் வார்டன்.
இதற்கிடையில் அரவிந்தனின் கூட்டாளிக்கும் அவனுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகிறது. இதில் அந்தக் கூட்டாளியும் தனி ஆளாகப் போய் மகேஷைப் போட்டுத் தள்ளத் திட்டமிடுகிறான். இங்கு மகேஷின் உயிருக்கு ஆபத்து. இன்னொரு பக்கம் போலீஸ் மகேஷைக் கொல்ல வந்த அந்த 2 பேரு யாருடான்னு கேட்குறாங்க. அது யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு மகேஷ் சொல்கிறான்.
இதனால் ஒரு கட்டத்தில் அந்த உயர் போலீஸ் அதிகாரியும் டென்ஷன் ஆகி 'சரி. இவனை மேஜிஸ்திரேட் முன்னாடி கொண்டு போய் நிறுத்திட வேண்டியதுதான்'னு சொல்றாரு. இதற்கிடையில் அவர் தனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் 'நீதான் நாளைக்கு இவனை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்' என உத்தரவிடுகிறார்.
இதை அங்கு நல்ல மனசுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கேட்டு விடுகிறார். இனி நடப்பது என்ன? மகேஷ், அன்பு இருவரில் தப்பியது யார்? என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.