மனோஜை லாக் செய்யும் ரோகிணி… அடுத்த பிரச்சனை பார்சல்!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
 
siragadikka aasai

முத்து மற்றும் மீனாவிற்கு மாடியில் ரூம் கட்ட மேஸ்திரி வந்து அளவெடுத்து அதற்கான கணக்கை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஸ்வேதா வர சரியாக ரூம் வேலைக்கு 2.50 லட்சம் பணம் ஆகும் என கூறுகிறார்.

ஆனால் மீனா தற்போது இருக்கும் செலவில் இது வேண்டாம் எனக் கூற முத்து விடாப்பிடியாக கட்டிவிடலாம் என முடிவெடுக்கிறார். மனோஜ்க்கு கல்யாணமானால் அந்த ரூமை பிடுங்கி விடுவாங்க என ரவி மற்றும் ஸ்ருதியும் ரூம் கட்ட ஆதரவு தருகின்றனர்.

எல்லோரும் கீழே இறங்கி வர மனோஜ் ஒரு ரூம் கட்டறதுக்காக இவ்ளோ சீனு என டயலாக் விடுகிறார். அவன் இல்லனா இந்த வீடே போய் இருக்கும் அப்ப நீ சும்மா தானே இருந்த, இப்பயும் அதே மாதிரி அமைதியாக இருந்துக்கோ என மூக்கை உடைத்து விடுகிறார்.

முன்பணத்தை அண்ணாமலை இல்லாததால் விஜயா கையில் கொடுக்க ஆசைப்படுகிறார் முத்து. ஆனால் விஜயா முடியாது என கூறிவிட நான் செய்து காட்டுகிறேன் என ஸ்ருதி ரூமுக்குள் செல்கிறார். எல்லோரும் என்ன செய்யப் போகிறார் என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

சுருதி ரூமிற்குள் சென்று நீங்கதான சோசியல் மீடியாவில் பெரிய வைரல் ஆகணும்னு சொன்னீங்க. இப்ப நீங்க இந்த பணத்தை வந்து கொடுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன் என அவருக்கு ஆசை காட்டி அழைத்து சென்று விடுகிறார்.

விஜயாவும் வாயெல்லாம் பல்லாக வீடியோவுக்கு போஸ் கொடுத்தவரே பணத்தை கொடுத்து விடுகிறார். ஷோரூமில் மனோஜ் தன்னுடைய பிரச்சனை குறித்து கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அப்போ அங்கு வரும் ரோகிணி இனிமே ஹாஸ்பிடலுக்கு நீனும் என்னுடன் வர வேண்டும் என ஆர்டர் போடுகிறார்.

பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கும் மனோஜ் எப்போ மாட்டப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

From Around the web