அம்மாவான ரோகிணி… மாட்டிய பப்பரப்பா மனோஜ்… என்ன நடக்க போகுது?
விவாகரத்துக்கு கையெழுத்து போட ரோகிணி மனோஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்புடன் நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் விஜயா விவாகரத்து கிடைக்கப் போகும் ஆர்ப்பாட்டத்தில் உடனே ரோகிணியை கையெழுத்து போடச் சொல்கிறார். ஆனாலும் ரோகிணி தயங்கிக்கொண்டே நிற்கிறார். மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாகவும் இருக்கிறார்.
நடக்கப் போகும் விஷயங்களை வக்கீல் விவரித்து விட்டு பத்திரத்தை ரோகிணி முன்னால் தருகிறார். ரோகிணியும் கண்ணீர் விட்டு கதறி கடைசியில் கையெழுத்து போடலாம் என எழுந்து நிற்கிறார். சரியாக அவர் கையெழுத்து போடும் நேரம் அவருக்கு தலைசுற்றி கீழே விழுகிறார்.
அங்கிருந்தவர்கள் பதறி டாக்டரை அழைத்து வர விஜயா மட்டும் இது இவளுடன் நடிப்புதான் என பேசுகிறார். ஆனால் மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் சேர்ந்து டாக்டரை அழைத்து வந்து ரோகிணியை செக் செய்ய சொல்கின்றனர்.
டாக்டர் எதிர்பார்த்தது போல ரோகிணியை சோதித்துவிட்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி கொடுக்கிறார். இதில் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக இருக்க மனோஜ் மட்டும் திருதிருவென முழிகிறார்.
ஷோரூமில் மனோஜ் தங்கி இருந்தபோது ரோகிணி பூனையை கூட்டி வந்த கதை ஃப்ளாஷ் பேக்கில் செல்கிறது. கர்ப்பத்திற்கு இப்படி ஒரு நியாயம் கற்பித்திருக்க வேண்டாம். பின்னர் மயக்கத்தில் இருந்து தெரியும் ரோகிணி தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார்.
விஜயா மட்டும் மனசாட்சியே இல்லாமல் மீண்டும் கையெழுத்து போட சொல்ல ரோகிணி தன்னால் இனி விவாகரத்து தர முடியாது என மறுத்து விடுகிறார். இதில் விஜயா சத்தம் போட்டுக் கொண்டிருக்க மனோஜ் மட்டும் திருதிருவென முழிகிறார்.
இனிமேல் தான் மனோஜின் இரண்டாம் கல்யாணம் பிரச்சனை வெடிக்கும் என்றும், ரோகிணியும் கனகாவும் இருவரும் இதே வீட்டிற்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விவாகரத்துக்கு கையெழுத்து போட ரோகிணி மனோஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்புடன் நேற்றைய எபிசோடு முடிந்தது.
