வீடு கிடைச்சாச்சு!... ஆனா மனோஜின் கடுப்பு எதுல இருக்குப்பா! ஐயா திருந்துங்க!!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
சிந்தாமணி அதிர்ச்சியாக இருக்கிறார். வக்கீலும் முத்து சார்பாக வந்து பேசி அவருக்கு இன்று வரை டைம் இருப்பதால் இது செல்லும் எனக் கூறுகின்றனர். பின்னர் காசை எடுத்துக்கொண்டு கடனில்லா சான்றில் கையெழுத்து வாங்க கேட்கிறார்.
பைனான்சியரும் கடுப்புடன் சிந்தாமணியை பார்த்துவிட்டு பின்னர் கையெழுத்தும் போட்டு விடுகிறார். அந்த டாக்குமெண்ட்டை பார்த்தூ முத்து சந்தோஷமாகி தன்னுடைய அப்பாவிடம் கொடுக்கிறார். இது உன்னுடைய உழைப்பு இந்தாப்பா என்கிறார்.
எல்லாரும் சந்தோஷமாக வீட்டை திறந்து உள்ளே செல்கின்றனர். விஜயாவும் எமோஷனலாக இருக்கிறார். மறுபடி இங்கே வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை என அழுக அண்ணாமலை தைரியம் சொல்கிறார். அவரும் கணவரிடம் சாய்ந்து ஆறுதல் தேடுகிறார்.
பின்னர் எல்லாரும் சேர்ந்து அவரை வீட்டு சேரில் உட்கார வைக்கிறார்கள். அதை பார்த்து விஜயாவிற்கு கண்ணீர் வருகிறது. இதை விழாவாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அடுத்த நாள் வீடே கோலாகலமாக ரெடி செய்யப்பட்டு இருக்க அங்கு ரவி, முத்து என எல்லாரும் ஜோடியாக இருக்கின்றனர்.
இதை பார்த்த மனோஜ் எல்லாரும் ஜோடியுடன் இருக்க தான் மட்டும் தனியாக இருப்பதால் கடுப்பாக இருக்கிறார். சத்யா பேச வர அவரிடமும் தேவையே இல்லாமல் உளறிக்கொண்டு இருக்கிறார். பின்னர் பார்வதியிடம் விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார்.
