மீனாவுக்கும் முத்துவுக்கு நேரம் சரியில்லையா? சிறகடிக்க ஆசை எபிசோட்டில் இப்படியா?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் தொகுப்புகள்
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

நீத்து சரக்கு பாட்டில்களை ஒரு பையில் வைத்து சத்தம் போடாமல் ஸ்ருதி ஹோட்டலில் வைத்து விட்டு வெளியேறிவிடுகிறார். அங்கிருந்த வெயிட்டர் மேன் அந்த பையை எடுத்து வந்து ஸ்ருதி ரவியிடம் கொடுக்க அவர்கள் என்ன செய்கிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வருகின்றனர். நாங்க வைக்கவில்லை எனக் கூற அவர்கள் நம்பாமல் மிரட்ட ஸ்ருதி இங்கு கேமரா இல்லை என்று நினைத்து தான் அவ இப்படி செஞ்சிட்டு போய் இருப்பா? ஆனா நாங்க கேமரா செட் செய்தது அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறி அதை செக் செய்கிறார்.

அப்போ இது நீத்து வேலை எனத் தெரிய போலீஸும் எதுவும் சொல்லாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் நீத்து ஆள் என்பதால அவரை பார்த்து இனிமே இப்படி செய்யாதீங்க. அப்புறம் உங்களை தான் உள்ளே வைக்கணும் எனக் கூறி செல்கிறார். அப்போ அங்கு வரும் ஸ்ருதியும் நீத்துவை மிரட்டி விட்டு செல்கிறார். 

பின்னர் விஜயா வீட்டில் வந்து புலம்ப யாரும் எதுவும் தெரியாமல் முழிக்கின்றனர். அவர் மீனாவின் சங்க கிளாஸ் நடத்தும் தேர்வுக்கு சென்ற கதையை சொல்லி கடுப்படிக்க முத்துவும் அவரை கலாய்த்துவிடுகிறார். அப்போ வக்கீல் கால் செய்து வீட்டை ஏலத்திற்கு விட இருப்பதாக சொல்கிறார். 

இதில் எல்லாரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். முத்து கண்டிப்பாக வீட்டை மீட்பேன் என்கிறார். பின்னர் ஸ்வேதா நடத்தும் ஆங்கில வகுப்பிற்கு இனி வரமாட்டோம் எனச் சொல்ல செல்கிறார்கள் முத்து மற்றும் மீனா. அங்கு ஸ்வேதாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். 

அப்போ அந்த கிளாஸில் இருந்த ஒருவர் தன்னை டிராப் செய்ய சொல்ல அவர் முத்து தூக்கமில்லாமல் இருப்பதை பார்த்து இதுமட்டும் உன்னை பெரிய ஆளாக மாத்தாது என ஒரு ஐடியாவை சொல்கிறார். இதை தொடர்ந்து நாளை நிகழ்வில் சில சர்ப்ரைஸும் காத்திருக்கிறது. 

From Around the web