மீனாவை தோற்கடிக்க சிந்தாமணியுடன் கைகோர்க்கும் விஜயா… இதெல்லாம் பாவம் அம்மணி!..

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

வீட்டில் மீனா வேலை செய்து கொண்டிருக்கும்போது முத்து செல்வத்துடன் பேசிக்கொண்டே வருகிறார். தன்னுடைய காரை ட்ராபிக் போலீஸ் நிறுத்தி ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட சொன்னதாக கூறுகிறார். ஏன் எந்த டாக்குமெண்ட்டும் சரியாக இல்லையா என கேட்க எல்லாம் சரியாகத்தான் இருந்துச்சு.

ஆனால் அபராதம் போட்டது நம்ம ஹோட்டல்ல வம்பு இழுத்த அந்த கான்ஸ்டபிள் என்கிறார். பழிவாங்கணும்னா என்னை தானே வாங்கணும். உன்கிட்ட எதுக்கு சண்டை செய்யணும். நேரம் வரும்போது அவருடைய கொட்டத்தை அடக்குகிறேன் என்கிறார்.

மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் அத்தையின் கொட்டத்தை அடக்குகிறேன் என யாரிடமும் சொன்னதாக அத்தையிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்கிறார். அப்ப நீ வளர்ந்துகிட்டு இருக்க மீனா. உனக்கு எதிரிகள் அதிகமாகுறாங்க என்கிறார்.

ஹாஸ்பிடலில் கான்ஸ்டபிள் இன் அம்மாவை சீதா கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கான்ஸ்டபிள் அங்கு வருகிறார். அந்த நேரத்தில் சீதாவிற்கு மீண்டும் கால் செய்து நாளை ஒரு பெரிய ஆர்டர் இருப்பதாகவும் உதவிக்கு நீ வரவேண்டும் எனவும் கூறுகிறார்.

சீதாவும் தான் வந்து விடுவதாக கூறுகிறார். ஹாஸ்பிடலில் யாரையோ பார்த்துக்கொண்டு இருந்தியே அவங்க இப்போ எப்படி இருக்காங்க என்கிறார். நல்லா இருக்காங்க அக்கா. கான்ஸ்டபிள் அம்மாவிடம் போனை கொடுக்க அவர் மீனாவிடம் பேசுகிறார். சீதாவை பற்றி புகழ்ந்து பேச மீனா சந்தோஷமாகி அவள் எங்களையும் இப்படித்தான் பார்த்துக் கொள்வாள் என்கிறார்.

தான் நாளை வரமாட்டேன் எனக்கூறி சீதா கிளம்ப கான்ஸ்டபிள் காசை கொடுக்க வர உரிமையா பேசிட்டு இப்போ என்ன காசு கொடுக்கிறீங்க என கோபப்பட உதவி எதுவும்னா சொல்லும்மா என்க அவர் வேண்டாம் எனச் செல்கிறார்.

ரூமிலிருக்கும் விஜயாவிற்கு சிந்தாமணி கால் செய்து இன்னைக்கு தேதி அஞ்சு உங்க மருமகளை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கோங்க என்கிறார். விஜயாவும் அதற்கு பிளான் போட்டு வீட்டில் இருப்பவர்களை பரபரப்பாக உடனே கிளம்பும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முத்துவிற்கு மீனா தோசை சுட்டுக் கொடுக்க நீயும் சாப்பிடு என அவரை உட்கார வைத்து சாப்பிட வைக்கிறார். விஜயா பரபரப்பாக முத்து எப்போது கிளம்புவான் என யோசிக்கிறார். அவர் கிளம்பியதும் கீழே விழுந்து கையில் சுளுக்கு பிடித்தது போல நாடகமாட துவங்கி விடுகிறார்.

Next Story