Siragadikka Aasai: ரூட்டை முத்து பக்கம் திருப்பிய இயக்குனர்… எஸ்கேப்பான ரோகிணி… இதெல்லாம் தேவையில்லாத ஆணிங்க…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் இருந்து ஒரிஜினல் அப்பா போட்டோவை எடுத்து வரச் சொல்கிறார். எதற்கு என வித்யா கேட்க அப்பாவை கண்ணிலே காட்டாமல் இருந்தால் சந்தேகம் வரும். அதற்காக தான் போட்டோ எடுத்துட்டு வர சொன்னதாக கூறுகிறார். அம்மா உண்மையை சொல்லிடு எனக் கூற அதெல்லாம் எனக்கு தெரியும் என்கிறார்.
வீட்டில் வந்து போட்டோவை எல்லாரிடமும் காட்டி சீன் போட்டு அழுக விஜயா நீங்கதான் உங்க பொண்ண விட்டு போயிட்டீங்க. சொத்தாவது வரணும் எனக் கூறி ரோகிணி அதிர்ச்சியாக பார்க்கிறார். வீட்டிற்கு வரும் முத்து இது யார் எனக் கேட்க ரோகிணியின் அப்பா என்கிறார்.
என்ன சின்ன வயசா இருக்காரு எனக் கேட்க பழைய போட்டோ என சமாளிக்கிறார். இதை தொடர்ந்து செருப்பு தைக்கும் பாட்டி மற்றும் தாத்தா கடையை காலி செய்ய டிராபிக் கான்ஸ்டபிள் வர அவர்கள் பிரச்னை செய்கின்றனர். அப்போ வரும் முத்து மற்றும் மீனா நியாயம் கேட்கின்றனர்.
இந்த பிரச்னையில் பாட்டிக்கு அடிப்பட்டு இருக்க அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அவருக்கு ரத்தம் தேவைப்படுவது குறித்து முத்து வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி சோஷியல் மீடியாவில் விளம்பரம் கொடுக்கலாம் என ஐடியா கொடுக்கிறார்.
அந்த நேரத்தில் போலீஸ் வந்து முத்துவை அழைத்து செல்ல வருகிறார். என்ன பிரச்னை எனக் கேட்க போலீஸிடம் சண்டை போட்டதாக கூற விஜயா அவரை திட்டுகிறார். தொடர்ந்து முத்துவை அழைத்து செல்கின்றனர். மனோஜ் மற்றும் ரோகிணி போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர்.
போலீஸிடம் மனோஜ் எதுவோ காதில் கேட்க கடுப்பில் அவர் மனோஜை அடித்துவிட்டு செல்கிறார். தொடர்ச்சியாக எல்லா போலீஸிடமும் சொல்ல அவர்களும் அடித்துவிட்டு செல்கின்றனர். இன்ஸ்பெக்டர் வந்து முத்து ஏன் எனக் கேட்க பாட்டியை தள்ளிவிட்ட விஷயத்தை சொல்கிறார்.
இன்ஸ்பெக்டரும் புரிஞ்சிக்கொண்டு முத்துவை எச்சரித்து அனுப்பி விடுகிறார். அந்த கான்ஸ்டபிளையும் அழைத்து மிரட்டி விடுகிறார். இருவரும் வெளியில் முறைத்துக்கொண்டு நிற்கின்றனர்.