ஊரை விட்டு செல்லும் கனகா… பர்ஸ்ட் நைட்டுக்கு தயாராகும் மனோஜ்!... என்னா நடக்குது?

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
siragadikka aasai

அண்ணாமலை தன்னுடைய மகன்கள் குழந்தை பெத்துக்க வேணும் என்ற ஆசையை கேட்ட நிலையில் அதை முதல் ஆளாக செய்ய போறது மனோஜ் தான் போல என கலாக்க தொடங்கி இருக்கின்றனர். 

மனோஜ் ஷோரூமில் இருக்க அங்கு கனகா வருகிறார். வா ஹஸ்பண்ட் என அவர் கூப்பிட ஷாக்காகும் மனோஜ் அவரை பேசி சமாளித்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் சரியாக ரோகிணியும் அங்கு வந்து விடுகிறார். 

கன்காவை அதிர்ச்சியாக பார்க்கிறார். இந்த பொண்ணு இங்க ஏன் வந்துச்சு எனக் கேட்கிறார். அந்த நேரத்தில் சரியாக கனகா ஹாஸ்பண்ட் அவரை அழைத்து கொண்டு வர ரோகிணி சந்தேகமாக வருகிறார். ஆனால் மனோஜ் நியூமராலஜிஸ்ட் பொண்டாட்டி தான் எனச் சொல்லி சமாளித்து விடுகிறார். 

தொடர்ந்து ரோகிணி எனக்கு அஞ்சு லட்சத்தை சீக்கிரம் ரெடி செஞ்சு கொடு. நான் ஊரை விட்டே போறேன் என்கிறார். மனோஜ் என்ன ஆச்சு எனக் கேட்க ரோகிணியும் தன்னால் இங்கு இருக்க முடியாது எனக் கூறிவிட்டு செல்கிறார்கள். 

முத்துவின் இங்கிலிஷ் கிளாஸில் ஸ்வேதா மற்றும் மிஸ்ராவின் காதல் விவகாரம் பற்றி பேசிக் கொள்கின்றனர். தொடர்ந்து மனோஜ் கனகாவின் வீட்டுக்கு செல்ல அங்கு அவர்களுக்கு முதலிரவு ரெடியாகி கொண்டு இருக்கிறது. 

கல்யாணம் பண்ணா காசு கொடுப்பதாக தானே சொன்னீங்க. நான் பண்ணேன். இப்போ இதை செஞ்சா நான் தான் ஜெயிலுக்கு போகணும் எனச் சொல்லி சென்றுவிடுகிறார். மனோஜின் ரகசியம் விரைவில் உடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web