சிந்தாமணிக்கு பல்ப் கொடுத்த மீனா… இதெல்லாம் ஒரு கதைனு பாக்க வைக்கிறீங்களேப்பா!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட்  சீரியல் ஆன சிறகடிக்க ஆசை நிறைய கதை பாதியாக இருக்கும் நிலையில் ஒன்றுமில்லாத கதையை இழுத்துக் கொண்டு இருப்பது பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது.

ரோகிணி வீட்டிற்கு வரும் வித்யாவிடம் அவர் அம்மா புலம்பி கொண்டிருக்கிறார். துபாய்க்கு ரோகிணி செல்ல இருப்பதாக அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் வரும் ரோகிணி இப்போ எதுக்கு அவகிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க என திட்டுகிறார்.

எதற்காக நீ இப்போது துபாய் போற என வித்யா கேட்க தன்னால் இங்கு இருக்க முடியாது. அதனால் நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டு அங்கு செல்ல போகிறேன். அம்மாவையும், கிரிஷையும் மட்டும் ஊருக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்.

 வித்யா நக்கலாக கர்மா எப்படி வேலை செய்து பாத்தியா? கிரிஷ் அம்மா துபாயில் வேலை செய்வதாக கதையை உருவாக்குன. இப்போ அதுவே உண்மையாகிடுச்சு என்கிறார். நீ பொய் சொல்லல நான் உன் வாழ்க்கையில் இவ்ளோ பிரச்சனை இல்ல என வித்யா கூறுகிறார்.

 ரோகிணி அதை ஒப்புக் கொண்டாலும் இனிமேல் தன்னால் இங்கு இருக்க முடியாது. மனோஜின் நினைப்பும் எனக்கு வந்து கொண்டே இருக்கும். ஆனால் என் பையனோட வாழ்க்கை தான் இப்போ எனக்கு முக்கியம் என கறாராக சொல்லிவிடுகிறார்.

 சிந்தாமணி மீனாவிடம் வந்து தேவையில்லாமல் சண்டைக்கு நிற்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு ஃபாரின் ஆர்டர் வர இங்கிலீஷ் தெரியாமல் அவர் அதை கோட்டை விடுகிறார். உடனே மீனா தன்னிடம் உள்ள அரைகுறை ஆங்கிலத்தில் அதை தன்வசமாக்கி கொள்கிறார். இதனால் மீண்டும் சிந்தாமணி மீனா மீது கடுப்பில் இருக்கிறார்.

ரோகிணி பிரச்சினை, கனகா கல்யாணம் என நிறைய கதைகலன்கள் பாதியில் நிற்கிறது. ஆனாலும் சம்பந்தமே இல்லாத கதையை இன்னும் இயக்குனர் ஒட்டிக் கொண்டிருப்பதை சிறகடிக்க ஆசை சீரியலின் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

From Around the web