விஜயாவோட ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கே!... அப்பு ஆன் தி வே அம்மணி…
பரபரப்பு இல்லாமல் எமோஷனல் ரூட் எடுத்து இருக்கிறது சிறகடிக்க ஆசை. இதுவாவது அவர்களின் அடுத்த ஹிட் ரூட்டுக்கு உதவுவா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
மீனா கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வரும் விஜயா சத்தம் போட துவங்குகிறார். எதற்காக நீ அந்த ஹாஸ்பிடல் போன என மீனாவிடம் கேட்க தனக்கு வயிற்று வலி வந்ததாக கூறுகிறார். ஆனால் விஜயா அதை நம்ப மறுக்கிறார்.
இந்த வீட்டிற்கு முதல் பேரக்குழந்தை மனோஜின் பிள்ளையாக தான் இருக்க வேண்டும் என அவர் கூற குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஸ்ருதி கோபத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்களுடைய முடிவு.
நீங்க பேசுறது சரியா இல்லை என கூறுகிறார். நீ வேணா முதல் குழந்தை பெத்துக்கோ ஆனா இந்த பூ கட்டுற அவளோட குழந்தை முதல் குழந்தையா இருக்கக் கூடாது என்கிறார். இதனால் மீனா மற்றும் முத்து இருவரும் அதிர்ச்சியில் கண்கலங்கி நிற்கின்றனர்.
அண்ணாமலை ரவி மற்றும் சுருதி மூவரும் விஜயாவை மாறி மாறி திட்டிக் கொண்டிருக்கின்றனர். மனோஜ் மாமியார் அவரை அழைத்து மீண்டும் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் பார்க்கிறார் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்.
இதனால் அவரிடம் 10 லட்சம் என இரண்டு பையை கொடுக்கிறார். அதை எடுத்துக்கொண்டு மனோஜ் சந்தோஷமாக வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கூறுகிறார். காசு கிடைத்த குஷியில் மனோஜ் ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாது முத்துவை அசிங்கமாக பேச கோபத்தில் மீனாவும் மனோஜை சத்தம் போடுகிறார். இருந்தாலும் விஜயா மனோஜ்க்கு சப்போர்ட்டாக பேசி உடனே ரோகினி இடம் இந்த காசை கொடுத்து கையெழுத்தை வாங்க சொல்கிறார்.
ஆனால் இதுவரை மனோஜின் பையில் இருப்பது பணமா அதில் இருக்கா என்பதை அவரும் இன்னும் சோதிக்கவில்லை என்பது ஒரு கேள்வியாக தான் இருக்கிறது. வரும் எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜின் விவாகரத்து நடக்குமா? இல்லை மீண்டும் மனோஜ் பல்பு வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
