சத்யா திருமணத்த விடுங்க… மனோஜுக்கு இரண்டாம் கல்யாணமாம்! விஜயாவுக்கு தெரியாம?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்தடுத்து இரண்டு கல்யாணங்கள் நடக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முத்துவின் பாட்டி வீட்டில் சத்யாவின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரேகா எல்லோரிடமும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தான் சின்ன வயதிலேயே அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டதாகவும் அதன் பின்னர் என்னுடைய எந்த நல்ல விஷயத்திலும் அம்மா இல்லை என வருத்தப்படுகிறார்.
அங்கு இருப்பவர்கள் அவரை சமாதானம் சொல்லி சரி செய்கின்றனர். முத்துவும் மீனாவும் அர்த்தமாக பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் யாருக்கும் தெரியாது விஜயா இந்த விஷயத்திலும் ரேகாவிற்கு நல்லது செய்திருக்கிறார்.
அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் சிந்தாமணி மற்றும் அவர் கணவர் இருவரும் பாட்டி வீட்டை நோக்கி வேகமாக காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கல்யாண வேலைகளும் படு பரபரப்பாக நடந்து வருகிறது.
அதே நேரத்தில் மனோஜ் கனகாவின் வீட்டிற்கு பார்க்க செல்கிறார். அங்கு அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கு திருமணத்தில் சம்மதம் எனக் கூறி ரோகிணியுடன் விவாகரத்து வாங்க 10 லட்சம் பணத்தை கேட்கிறார்.
ஆனால் கனகாவின் அம்மா பணத்தை தற்போது தர முடியாது. என் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினால்தான் தருவேன் என கறாராக பேசி விடுகிறார். இதனால் திருமணத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம் என நியூமராலஜிஸ்ட் ஐடியா கொடுக்க இருதரப்பும் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.
சத்யா மற்றும் ரேகா இருவரும் மணமேடையில் அமர திருமண வீட்டை நோக்கி சிந்தாமணி பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறார். இந்த திருமணம் நடக்குமா, விஜயாவிற்கு தெரியாமல் மனோஜ் இரண்டாவது தாலி கட்டுவாரா என பல கேள்விகளுடன் இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.
