சிந்தாமணி கண்ணீருக்கு ஜாலி பண்ணும் விஜயா… ஆப்பு ஆன் தி வே அம்மணி!
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சத்யா மற்றும் ரேகா இருவரின் திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. கோபத்துடன் வெளியேறிய சிந்தாமணி மற்றும் அவர் கணவர் இருவரும் மீண்டும் ரேகாவை பார்க்க பாட்டி வீட்டிற்கு வருகின்றனர். சிந்தாமணி கண்ணீருடன் உனக்காகத்தானே வாழ்ந்தேன்.
இந்த கல்யாணம் உனக்கு சந்தோஷத்தை தராது. நீ என்னுடனே வந்துவிடு ரேகா என கத்தி கதறி அழுகிறார். அங்கே இருப்பவர்கள் ரேகாவை ஆசீர்வாதம் செய்ய சொல்லியும் கூட அவர் உன்னால் சத்யாவுடன் நிம்மதியாக வாழ முடியாது என திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
அப்பாவும் அம்மாவும் இப்படி நடந்து கொண்டதை நினைத்து ரேகா கண்ணீர் விட்டு அழுக அவரை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார் சத்யா. பின்னர் பாட்டி வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பி சத்யா வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.
ரேகாவை தடபுடலாக வீட்டிற்குள் வரவேற்று அனைவரும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இத்தனை நாள் தனியாக வாழ்ந்தேன் தற்போது தனக்கு நிறைய சொந்தங்கள் கிடைத்து இருப்பதாக ரேகாவும் சந்தோஷமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மனோஜ் ஷோரூமில் சந்தோஷுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஜீவா இரண்டாவது திருமணம் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்காமல் நடந்தால் என்ன பிரச்சனை வரும் என ஓவர் பில்டப்பில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதனால் மனோஜ் பயத்தில் இந்த திருமணத்தை செய்து கொள்ள வேண்டுமா என கவலையுடன் இருக்கிறார். அப்போது கனகாவின் அம்மா ஷோரூமிற்கு வருகிறார். என்னாச்சு என அவர் கேட்க இந்த திருமணம் இப்போது நடக்க வேண்டுமா என கேட்கிறார் மனோஜ்.
பெரிய அளவில் இதை யாரிடமும் சொல்லப்போவதில்லை. என்னுடைய வீட்டில் ரகசியமாக தானே இந்த கல்யாணம் நடக்குது. அதெல்லாம் எதுவும் பிரச்சனை வராது. வந்தாலும் தான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் தைரியம் சொல்லி மனோஜிடம் 50,000 பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். அந்த தைரியத்தில் மனோஜும் கல்யாணத்திற்கு ரெடியாகி விடுகிறார்.
