மனோஜுக்கு ரோகிணியே பரவாயில்ல போல! சிறகடிக்க ஆசையில் அடுத்த ஆட்டம்!
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடரான சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடத்த இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சத்யா திருமணம் முடிந்து தன்னுடைய வீட்டிற்கு ரேகாவை அழைத்து வந்துவிடுகிறார். எல்லோரும் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றுவிட சந்திரா முத்து மற்றும் மீனாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
வசதியாக வாழ்ந்த ரேகாவால் இங்கு இருக்க முடியுமா என்ன செய்யப் போகிறார்கள் என கவலையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
சத்யா திருமணம் முடிந்த கையோடு வீட்டிற்கு வரும் சீதாவை அருண் கோபத்துடன் திட்டிக் கொண்டிருக்கிறார். என்னிடம் பொய் சொல்லி எனக்கே துரோகம் செய்துவிட்ட, உன்னை சும்மா விட மாட்டேன் என அவரும் அடித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
கனகாவின் அம்மா கல்யாண சாப்பாடு இருக்கு ஸ்ருதி ரெஸ்டாரண்டில் புக் செய்கிறார். அங்கிருந்த மீனாவை கல்யாண டெக்கரேஷனுக்காக ஓகே செய்துவிட்டு அவர் கிளம்புகிறார். அப்பொழுது அங்கு வரும் ரோகிணிக்கு மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் அவர் எடுத்த திடீர் முடிவு சரிதான் என கூறுகின்றனர்.
இனிமேல் எனக்கு கிறிஸின் வாழ்க்கை தான் முக்கியம். அந்த ஐந்து லட்சம் பணத்தை கொடுத்தால் தனக்கு உதவியாக இருக்கும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். சுருதி கல்யாண ஆர்டரை கூறி மேக்கப்பிற்கு புக் செய்து கொள்ளுமாறு ரோகிணியுடன் சொல்கிறார்.
வீட்டில் இருந்து குடும்பமாக மனோஜ் திருமணம் எனத் தெரியாமல் எல்லோரும் ஆர்டர் எடுத்து இருக்கின்றனர். குடும்பமே பரபரப்பாக திருமணத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்க மனோஜ் இந்த திருமணத்தை செய்து கொள்வாரா என எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.
