மனோஜ் திருமணத்தில் கூடிய குடும்பம்… தலைவர் சிக்குவாரா? இல்லையா?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் முக்கிய தொகுப்புகள்.
மனோஜ் கனகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்ட நிலையில் அதற்கான வேலைகள் வீட்டில் நடந்து வருகிறது. அண்ணனின் திருமணம் என தெரியாமல் சமையல் ஏற்பாட்டை ரவியும், டெக்கரேஷனை முத்துவும் செய்து வருகின்றனர்.
மணப்பெண்ணிற்கு மேக்கப் போட ரோகிணி அந்த வீட்டிற்கு வருகிறார். அவரும் கனகாவை அழகாக பேசி அமர வைத்து அவருக்கு மேக்கப் செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கும் வேலைகளை ரவி மற்றும் முத்து இருவரும் செய்து கொண்டிருக்கிறனர்.
அந்த நேரத்தில் ரோகிணி வெளியில் வர நால்வரையும் பார்த்து எப்படி இருக்கீங்க எனக் கேட்கிறார். முத்து அமைதியாக இல்லாமல் உனக்கு தான் நல்ல வருமானம் வருதுல்ல எதுக்கு அஞ்சு லட்சம் காச கேட்கிற எனக் கேட்கிறார்.
ஆனால் ரோகிணி தான் கொடுத்த காசை தான் கேட்கிறேன் பிரச்சனை செய்ய வரவில்லை என கூறிவிடுகிறார். ஹீரோ என்பதற்காக அண்ணனுக்கு ஒரு நியாயம். அண்ணன் மனைவிக்கு ஒரு நியாயம் என முத்து பேசுவது பலருக்கு சலிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் மனோஜ் தன்னுடைய நண்பர்கள் மற்றும் நியூமராலஜிஸ்ட்டுடன் அந்த வீட்டிற்கு வருகிறார். அவரை ஆரத்தி எடுத்து அழைத்து ரூமிற்குள் விடுகிறார் கனகாவின் அம்மா. பின்னர் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது.
அந்த நேரத்தில் சந்தோஷ் மற்றும் ஜீவா இருவரும் ஏற்பாடுகளை பார்க்க கீழே செல்கின்றனர். அங்கு முத்துவை பார்த்து அலறி இருவரும் வந்து மனோஜிடம் சொல்ல அவரும் வீட்டை விட்டு ஓடிப் போக துடிக்கிறார். அப்போ இந்த கல்யாணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
