மீனாவுக்கு வந்த திடீர் பிரச்சனை.. இனி அண்ணாமலை என்ன செய்வாரோ?
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ஒரு சீரியஸ் கதையை தொடங்கிவிட்டனர். இதனால் இன்ன நடக்க போகுதோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்வேதாவின் ஆங்கில வகுப்பில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அவர் மிஸ்ராவை பார்த்து காதல் வயப்படுகிறார். அதே நேரத்தில் மீனாவிற்கு திடீரென வயிறு வலி வர அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.
மீனாவிற்கு டெஸ்ட் எடுத்து டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென முத்துவிற்கு தகவல் சொல்லி அவரும் வந்து பதட்டத்துடன் என்ன ஆனது என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஸ்வேதா நடந்த விஷயங்களை அவரிடம் கூறுகிறார்.
அந்த நேரத்தில் டாக்டர் முத்து மற்றும் மீனாவை அழைத்து, மீனாவிற்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாகவும், இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை ஏற்படும் என்றும் கூறுகிறார். இதனால் மனமுடைந்து முத்து மற்றும் மீனா இருவரும் அழுது கொண்டிருக்கிறனர்.
இதற்கு தன்னால் சிகிச்சை அளிக்க முடியாது அதனால் மகப்பேறு மருத்துவர் பார்க்கும்படி அவர்களை அனுப்பி விடுகிறார் அந்த டாக்டர். வெளியில் வரும் மீனா தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
வெளியில் இவர்கள் என்று பேசிக் கொண்டிருப்பதை விஜயா பார்த்துவிட்டு மீனா கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொள்கிறார். அதை சீதாவிடம் பேசி அவர் உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்க அவர் இல்லை என மருத்துவம் விஜயா நம்ப மறுக்கிறார்.
சமீபத்தில் தான் அண்ணாமலை தன்னுடைய மகன்களிடம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என சொல்லி தனக்கு பேரனோ பேத்தியோ வேண்டும் என அவர் சொல்லி நிலையில் இந்த விஷயம் மீனாக்கு நடந்திருப்பது ரசிகர்களிடம் என்ன நடக்கும் என்ற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது.
