மனோஜுக்கு தயாராகும் ஆப்பு! முத்து வலையில் சிக்க போறது உறுதி!
மனோஜ் மற்றும் கனகா இருவரும் ரிஜிஸ்டர் ஆபிஸில் முறையாக மீண்டும் மாலை மாற்றி கல்யாணம் செய்து கொள்கின்றனர். அந்த வேலை முடிந்த கையோடு அவர்கள் வெளியேற முத்துவும் மீனாவும் ரூம் கட்டும் வேலைக்காக அனுமதி வேண்டி கடிதம் கொடுத்து விட்டு வருகின்றனர்.
அங்கு மனோஜ் இருப்பதை பார்த்த மீனா முத்துவிடம் சொல்ல அவர் மனோஜிடம் செல்கிறார். அங்கு முத்துவை பார்த்ததும் ஷாக்காகும் மனோஜ் மீண்டும் நியூமராலஜிஸ்ட்டை மாட்டி விடுகிறார். அவர் தான் பதிவு திருமணத்துக்கு வந்ததாக சொல்கிறார்.
அவர் சொன்ன பொய்யை நம்பிவிட்டு முத்து அங்கிருந்து சென்று விடுகிறார். மனோஜும் அப்பாடா இப்போதான் தப்பிச்சேன் என்கிறார். பின்னர் வீட்டில் ரவி மற்றும் ஸ்ருதி நெருக்கமாக இருப்பதை நாச்சியார் பாட்டி பார்த்துவிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.
அவரை முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் சமாதானம் செய்கின்றனர். முத்துவும், மீனாவும் தனியாக இருப்பதை பார்க்கும் பாட்டி மீண்டும் பிரச்சனை செய்கிறார். இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் எனவும் ஐடியா கொடுக்கிறார்.
ரோகிணி, கிரிஷுக்கு பாசம் வேண்டும் என்ற நம்பிக்கையில் மனோஜிடம் விட்டு செல்கிறார். மனோஜ் முடியாது என்றால் நான் விவாகரத்து தரமாட்டேன் எனக் கூறிவிடுகிறார். அதனால் வேறு வழியில்லாமல் மனோஜ் கிரிஷை இன்று பார்த்து கொள்கிறேன் எனக் கூறிவிடுகிறார். கதையில எந்த ட்விஸ்ட்டும் இல்லையேப்பா!