சிந்தாமணி வலையில் சத்யா… மனோஜை லாக் செய்யும் ரோகிணி!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்!

 
siragadikka aasai

மனோஜ் ரோகிணி டைவர்ஸ் கொடுக்கிறேன் எனக் கூறியதால் கிரிஷை பார்த்து கொள்வதாக சொல்கிறார். அதனால் கிரிஷ் ஷோரூம் வந்திருக்க மனோஜும் அவரிடம் பேசுகிறார். ஆனால் கிரிஷ் கேள்வியை சமாளிக்க முடியாமல் அவருக்கு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்கிறார். 

தொடர்ந்து நிறைய ஸ்நாக்ஸ் கிரிஷ் சாப்பிட்டு கொண்டு இருக்க அப்போ வரும் ரோகிணி என்ன ஆச்சு எனக் கேட்க கிரிஷ் மனோஜை கை காட்டுகிறார். மனோஜை காதில் பஞ்சுடன் தூங்குகிறார். அவரை எழுப்பி கேட்க உன் பையனை என்னால் தனியாக சமாளிக்க முடியாது என்கிறார். 

அதனால் இனி நானும் வரேன் என ரோகிணி கூறிவிடுகிறார். சத்யா ரேகா அப்பாவின் பிசினஸை டேக் ஓவர் செய்து கொள்கிறார். அவர் கெத்தாக முதலாளி சேரில் இருக்க மற்ற ஊழியர் எல்லாம் பொறாமையில் பொங்குகின்றனர். 

பின்னர் வீட்டில் நாச்சியார் அண்ணாமலையுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து மீனா முத்துவை பார்க்க வரும் சத்யா அங்கு நடந்ததை சொல்ல இருவரும் சந்தோஷப்பட்டு ட்ரீட் கேட்கின்றனர் சாப்பிட போகலாம் எனக் கிளம்பும்போது சிந்தாமணி கால் செய்கிறார். சாப்பிட அழைக்க பெரிய ஆட்களுடன் சாப்பாடுக்கு டேபிள் புக் செய்திருக்கிறார்கள். நான் தான் சொல்ல மறந்துட்டேன் என சத்யா கூற மீனா சந்தேகமாக சத்யாவை பார்க்கிறார். சிந்தாமணி திட்டத்தில் முன்னேற நம்ம ஹீரோ என்ன செய்ய போறார் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

From Around the web