விஜயா அறிவே அறிவுதான்… மனோஜுக்கு இந்த சிக்கல் தேவைதான்!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
 
siragadikka aasai

மனோஜிடம் கனகாவை வெளியில் அழைத்து செல்ல சொல்கிறார் அவர் அம்மா. வேறு வழியில்லாமல் பார்க்கிற்கு மனோஜ் அவரை அழைத்து செல்ல அங்கு பார்வதி மற்றும் சிவன் இருவரும் ஷூட்டிங்கிற்காக வருகின்றனர். 

மனோஜ் மறைந்து மறைந்து செல்ல வேறு வழியில்லாமல் நியுமராலஜிட்டை வர சொல்கிறார். அவர் வந்து தன்னை கவர்மெண்ட் சர்வெண்ட் எனக் கூறி இங்கு ரெக்கார்ட் செய்ய கூடாது என அனுப்பி விடுகிறார். 

அப்பாடா என மூச்சு விடும் மனோஜ் வீட்டுக்கு செல்கிறார். மீனா ஹாஸ்பிட்டலில் இருக்க சத்யா மற்றும் ரேகா இருவரும் பார்த்து கொண்டு இருக்கின்றனர். வேறு வீடு பார்க்க சொல்ல சத்யா தற்போது வேண்டாம் என்கிறார். 

ஆனால் ரேகா அவங்க சொல்றது சரியாதான் இருக்கு என்கிறார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரும் மீனாவை வீட்டில் இருப்பவர்கள் பாசமும் அழைத்து உட்கார வைக்கின்றனர். விஜயாவே ஒரு படி மேலே போய் ரொம்ப அக்கறையாக பேசுகிறார். 

பின்னர் முத்து வீட்டில் ரோகிணி ஹாஸ்பிட்டல் ரெக்கார்ட்டில் அப்பா பெயரை மனோஜ் எனக் குறிப்பிட்டு இருப்பதாக சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த பெயரே பிறப்பு சான்றிதழ் வரை வந்துவிட்டால் இன்னும் பிரச்சனையாகும் என்கின்றனர். 

உடனே விஜயா மனோஜின் பெயரையே மாத்த சொல்கிறார். இனிமே நீ மனோஜே இல்ல. வேற பெயரை கெசட்டில் வச்சிக்கோ எனச் சொல்ல குடும்பமே சிரிக்க தொடங்குகின்றனர். பின்னர் மீனா முத்து ரூம் கட்ட மேஸ்திரியை வர சொல்லி இருக்கிறார். விஜயா கூட அவங்களுக்கு சப்போர்ட் செய்து மனோஜை கலாய்க்கிறார். 

From Around the web