சீதாவுக்கு அடுத்த சத்யா லைஃபும் காலி… சிந்தாமணி சூழ்ச்சியில் சிக்கிய ரேகா!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்!
 
siragadikka aasai

மனோஜிடம் சந்தோஷ் மற்றும் ஜீவா இருவரும் சம்பளம் கேட்டு தொல்லை செய்கின்றனர். ஒருகட்டத்தில் நியுமராலஜிஸ்ட் அந்த காசை ரோகிணிக்கிட்ட கேளுங்க என்கிறார். மனோஜும் வெக்கமே இல்லாமல் ரோகிணியிடம் கடன் கேட்கிறார். 

குழந்தை பிறக்க போகும் குஷியில் இருக்கும் ரோகிணியோ தரேன் என ஒப்புக்கொள்கிறார். சிந்தாமணி பேசி சமாதானம் செய்து ரேகா மற்றும் சத்யாவை அப்பாவுக்கு நெஞ்சு வலி எனச் சொல்லி அழைத்து வருகிறார். வீட்டில் அப்பாவும் ஓவர் பெர்பாமன்ஸ் போடுகிறார்.

சிந்தாமணியும் போதாகுறைக்கு ஆஹா ஓஹோ என டயலாக் விட்டு அப்பா பொண்ணை சேர்த்து வைத்து விடுகிறார். பின்னர் சத்யாவிடமும் நல்லப்படியாகவே பேசுகின்றனர். ரேகாவை இன்னும் கொஞ்ச நாள் தங்களுடன் இருக்கும்படி சொல்கின்றனர். 

சத்யா தயங்கினாலும் பின்னர் ரேகாவுக்காக சம்மதம் சொல்கிறார். மீனா முத்து ரூம் கட்டும் பணி தொடங்குகிறது. முதல் கல்லை வைக்க எல்லாரும் கூடி இருக்கின்றனர். அண்ணாமலை இல்லாததால் முத்து, மீனா விஜயா வர வேண்டும் என ஆசைப்படுகின்றனர். 

ஆனால் விஜயா வீம்பாக இருக்க பாப்புலர் ஆகலாம் என ஸ்ருதி ஐடியா கொடுத்து மாடிக்கு அழைத்து வருகிறார். எல்லாரும் சந்தோஷப்பட பெருமையாக விஜயா முதல் கல்லை வைத்து போஸ் கொடுக்கிறார். கதைக்கு வாங்க பாஸ்!

From Around the web