சீதா ஓவர்… நெக்ஸ்ட் சத்யாவா? ரூட்ட மாத்துங்கப்பா! உருட்டும் சிறகடிக்க ஆசை!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்!

 
siragadikka aasai

சீதாவை நேரில் பார்க்க வருகிறார் அருண். வீட்டுக்கு வா அம்மா இறந்ததாலே இப்படி நடந்துக்கிட்டேன் எனக் கூறிவிடுகிறார். ஆனாலும் சீதா பொறுமையாக அக்கா மாமா சம்மதத்துடனே வீட்டுக்கு வருவேன் என விடாப்படியாக சொல்லி விடுகிறார். 

அருணும் அதற்கு காத்திருப்பதாக சொல்லி அனுப்புகிறார். பின்னர் ரேகா அப்பா, அம்மா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வீட்டுக்கு அனுப்ப கூடாது. இங்கையே வச்சிக்கணும் என யோசிக்கின்றனர். அந்த நேரத்தில் ரேகா, சத்யா வர மீண்டும் அவர் போய் படுத்து கொள்கிறார். 

இங்கையே இருந்தா ரேகா அப்பாவை பார்த்துப்பா மாப்பிள்ளை நீங்க தான் பிசினஸை பாத்துக்கணும் என்கின்றனர். ஆனால் சத்யா தயங்க ரேகா ஆண்ட்டியை அப்போ அப்போ போய் பாத்துக்கலாம். ப்ளீஸ் எனக் கேட்க சத்யாவும் சம்மதம் சொல்கிறார். 

பின்னர் நாச்சியாரை வீட்டுக்கு அழைத்து வருகிறார் அண்ணாமலை. ஆனால் அவருக்கு மீனா, ஸ்ருதியை நியாபகமே இல்லாமல் புதிதாக பார்ப்பது போல பேசுகிறார். குடும்பமே குழப்பத்தில் இருக்கின்றனர். அண்ணாமலை அம்மாவுக்கு பல வருட நினைவு மறந்துவிட்டதாக சொல்கிறார். 

சீதாவை அழைத்து கொண்டு முத்து மற்றும் மீனா அருண் வீட்டுக்கு செல்கின்றனர். அருண் முறைக்காமல் இருக்கிறார். எல்லாரையும் வீட்டுக்குள் அழைக்கிறார். முத்து அருணுக்கு அட்வைஸ் செய்கிறார். முக்கிய கதைகள் இருக்க இந்த ரவுண்ட் அடிப்பது டைரக்டருக்கு ஏன் இந்த ஆசையோ?

From Around the web