அடேய் சத்யா என்ன புது திமிரா? சீக்கிரம் சிக்க போற மகனே!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்!
 
siragadikka aasai

சத்யா அம்மா வீட்டில் வந்து ஓவர் பந்தா போட்டு கொண்டு இருக்கிறார். அவர் வந்தாலும் நான் வர முடியாது. ரேகாவுக்கு இங்க செட்டாகாது என டயலாக் விட்டு கொண்டு இருக்கிறார். மீனா, முத்து வர அவர்களிடமும் ஓவர் சீன் போடுகிறார். 

மீனா ரேகா அப்படி நினைக்க மாட்டாளே எனக் கேட்க அவ நினைக்க மாட்டா தான். ஆனா நான் நினைக்கணும்ல. என்னால இங்க வர முடியாது என திமிராக பேசுகிறார். முத்து பேச்சை மாற்றும் விதமாக கல்யாணம் நடக்க இருப்பதாக சொல்கிறார். 

அதுவும் பாட்டிக்காக முத்து, மீனா மீண்டும் கல்யாணம் செய்துக்கொள்ள இருப்பதை சொல்ல சத்யா நக்கலாக சிரிக்கிறார். ட்ரீட்மெண்ட் செஞ்சாலே சரி ஆகிடுவாங்க. இப்படி பொம்மை கல்யாணத்துக்கெல்லாம் என்னால் வர முடியாது என சொல்லி சென்று விடுகிறார். 

மீனாவும் அவர் அம்மாவும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். ஆனால் முத்து அமைதியாக அவர்களை சமாதானம் செய்கிறார். ஷோரூம் வரும் ரோகிணி மனோஜிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ மனோஜும் இந்த குழந்தையை உடனே அபார்ஷன் செய்ய சொல்லிக்கொண்டு இருக்கிறார். 

பின்னர் அந்த சிந்தனையிலேயே வெளியில் வரும் ரோகிணி மயக்கமாகி விழுந்துவிடுகிறார். அவரை வித்யா பார்த்துவிட ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஷோரூமில் நடந்த விஷயத்தை சொல்ல வித்யா அவரை நம்பி பிள்ளை பெத்துக்காதே என எச்சரிக்கிறார். 

மீனா, முத்து மற்றும் ஸ்ருதி மற்றும் ரவி நகை எடுக்க செல்ல அங்கு எல்லாரும் சந்திக்கின்றனர். பின்னர் சந்தோஷமாக நகை பர்சேஸ் செய்துக்கொண்டும் இருக்கின்றனர். அப்போ கல்யாணம் கலாட்டா ஆரம்பமாக போகுதா? 

From Around the web