ரோகிணியின் திடீர் திட்டம்.. பல்ப் கொடுத்த மனோஜ்… அடுத்த பிரச்சனை!...

சிறகடிக்க ஆசை சமீபகாலமாகவே பரபரப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த எபிசோட் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர்ல் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

சிறகடிக்க ஆசை தொடரில் கடந்த சில எபிசோட்களாக நடந்து வந்த வீட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது ரோகிணியின் விவாகரத்து சர்ச்சை தொடங்கி இருக்கிறது. ரோகிணி மீது மனோஜ் கோபத்தில் இருந்தார். 

ஆனால் பைனான்சியர் பிரச்சனையில் 5 லட்சத்தினை ரோகிணி கொடுத்ததால் அவர் மீது ஒரு சாப்ட் கார்னர் வந்தது. தற்போது மாசத்தின் செலவு காசை கொடுக்க வீட்டுக்கு வந்து நிற்கிறார். ஆனால் உள்ளே வர சொல்கிறார் ரோகிணி. 

உட்கார வைத்து சாப்பிட வைத்து என் மேல உனக்கு பாசம் இருக்குனு தெரியும் என பேச நீ சொன்ன பொய்யையும் நான் மறக்கலை என பதிலடி கொடுக்கிறார். இப்போ நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் எனக் கூற என்னவென விசாரிக்கிறார். 

என்னால் அந்த வீட்டில் வந்து வாழ முடியாது. நீ அந்த வீட்டை வந்து என்கூட வாழணும் என்கிறார். இதில் ஷாக்காகும் மனோஜ் அதெல்லாம் முடியாது. எனக்கு நீ விவாகரத்து கொடு என்கிறார். உனக்காக நான் காசுக்கு எங்கெல்லாம் அலைஞ்சேன் தெரியுமா என்கிறார். 

அப்போ காசை கொடுத்தா விட்டுடுவீயா எனக் கேட்க நீ காசை கொடு நான் கையெழுத்து போடுறேன். இல்லை என்றால் வீட்டை விட்டு வந்து என்னுடன் வாழணும் என்கிறார். அதே போல நீத்து முன்னதாக ஸ்ருதிக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் கைக்கோர்க்கிறார். 

ஸ்ருதியை கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்பட்ட பிஜூ பின்னர் அவரை கொலை செய்ய பார்த்தார். அவருடன் கூட்டணி போட்டு தற்போது ஸ்ருதியை பார்த்து ரவியுடன் சேர திட்டம் போடுகிறார். இனிமேல் கதை சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


 

From Around the web